தமிழகம் முழுவதும் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமபுறங்களில் மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, வீடு முற்றங்களில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் சமையலறையில் பொங்கல் வைத்து, கடவுளை வணங்கினர்.
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லாததால், மக்கள் தங்கள் குடும்பங்களுடன், வீடுகளிலேயே எளியாமையாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
பிரபலங்களும் தங்கள் வீட்டில் வைத்து’ பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திக்கேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மகன் குகன் ஆகியோருடன் சேர்ந்து இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
அதில் சிவகார்த்திக்கேயனும், அவருடைய மகனும், பச்சை நிறத்தில் ஒரே மாதிரியாக வேஷ்டி, சட்டை அணிந்துள்ளனர். மகள் ஆராதனா, நீல நிற உடுப்பில் பார்க்க அழகாக இருக்கிறார். ஆர்த்தி எப்போதும் போல சிம்பிளாக பட்டுப்புடவையில் இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்’ சிவகார்த்திகேயன் குடும்பத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்🙏 #HappyPongal #HappySankranti ❤️❤️🤗🤗 pic.twitter.com/BtVgHJMQOJ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 14, 2022
ஏற்கெனவே சிவகார்த்திகேயன் கடந்த 2019ஆம் ஆண்டு, தனது மகள் ஆராதனா குழந்தையாக இருந்தபோது, அவளுடன் சேர்ந்து குட்டி, குட்டி, மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடிய படங்கள் பலரையும் கவர்ந்தது. இதை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பிங்டு செய்தும் வைத்துள்ளார். இதோ அந்த அழகான படம்!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்🙏😊 Happy Pongal 😊 pic.twitter.com/fW5tsxOEP3
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 15, 2019
சிவகார்த்திகேயன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற, ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக SK 20 என்று பெயரிடப்பட்டுள்ளது. தமன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இதேபோல், நடிகர் சூரியும், தனது மகன், மற்றும் மகளுடன் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடிய படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். சூரி இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான்’, கார்த்தியின் ‘விருமன்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்டப் படங்களிள் நடிக்கிறார்.
அத்துடன் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். மேலும், அமீர் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சூரி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “