Advertisment

சூர்யா – ஜோதிகா மகள் தியாவின் அசத்தல் நடனம் : இன்ஸ்டா வீடியோ வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் சூர்யா கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
சூர்யா – ஜோதிகா மகள் தியாவின் அசத்தல் நடனம் : இன்ஸ்டா வீடியோ வைரல்

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியான சூர்யா ஜோதிகா தம்பதியின் மகள் தியா சூர்யா நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வலம் வரும் நடிகர் சூர்யா கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு  தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கேரக்டரில் நடித்து வரும் ஜோதிகா தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் காதல், இந்தியின் ஸ்ரீ என்ற படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் சூர்யா 42, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் சூர்யா பிஸியாக நடித்து வருகிறார்.

சூர்யா ஜோதியாக நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தங்களது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல் அவ்வப்போது இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சூர்யாவின் மகள் தியா நடனமாடும் வீடியோ பதிவு வெளியாகி உள்ளது.

சமீபத்தில் 10-வது படிப்பை முடித்த தியா, சமீபத்தில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது தியா நடனமாடும் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தீபாவளி கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jyothika Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment