கன்னட நடிகர் விஜய் ராகவேந்திரா மனைவி ஸ்பந்தனா மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை இரவு பாங்காக்கில் காலமானார். அவருக்கு வயது 41.
ராகவேந்திராவின் சகோதரர் ஸ்ரீ முரளி திங்கள்கிழமை மரணத்தை உறுதிப்படுத்தினார். ஸ்பந்தனா தனது உறவினர்களுடன் தாய்லாந்தின் தலைநகரில் விடுமுறையில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கம் போல் தூங்கிய அவர் எழுந்திருக்கவில்லை. இந்த நிலையில், ஸ்பந்தனாவுக்கு, குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்சி பிகே ஹரிபிரசாத் திங்கள்கிழமை பெங்களூருவில் குடும்பத்தினரை சந்தித்தார். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், செவ்வாய்க்கிழமைக்குள் (ஆக்.8) உடல் பெங்களூரு வந்து சேரும் என்றும் அவர் கூறினார்.
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி பி கே சிவராமின் மகளான ஸ்பந்தனா 2007 இல் விஜய்யை மணந்தார். தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார்.
விஜய் பல ஆண்டுகளாக கன்னடத் திரையுலகில் நடிகராகவும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார், 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதை சிவயோகி ஸ்ரீ புட்டய்யாஜ்ஜா திரைப்படத்திற்காக வென்றார்.
பிக் பாஸ் கன்னடத்தின் முதல் சீசனில் வெற்றி பெற்ற அவர், டான்ஸ் கர்நாடகா டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“