மனைவி காலில் விழுந்தால் தவறில்லை...மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அட்வைஸ்!

சமமான மரியாதை பற்றியும் அவர் கூறியிருக்கும் பதில் பெண்களிடம் கைத்தட்டல்களை வாங்கி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி  பிரபல  சினிமா வலைத்தளம் ஒன்றிற்கு  அளித்த பேட்டி  சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி சமீப காலமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத் நடிகராக மாறியுள்ளார். புதுப்பேட்டையில் கூட்டத்தில் ஒருவனாக ஆரம்பித்த அவரது பயணம் இன்று தனி ஒருவனாக உயர்ந்து நிற்கிறது. ரசிகர்கள் அவரை திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜூங்கா, 96 போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு நடிகராக இவ்வளவு ரசிகர்களை விஜய்சேதுபதி தன்பக்கம் இழுத்தார்? என்பது எல்லோருக்கும் எழும் கேள்வியாக உள்ளது.

ஆனால் ரசிகர்களை பொருத்தவரையில் விஜய்சேதுபதி ஒரு நடிகரை போல் நடந்துக் கொள்ளாமல் நண்பராக, தோழனாக, அண்ணாவாக நடந்துக் கொள்வதாக பெரும்பாலான ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகரை கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது, அவரே இழுத்து செல்பி எடுத்துக் கொள்வது என விஜய் சேதுபதியின் வீடியோக்கள் இணையதளத்தில செம்ம வைரல். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படமான சேதுபதி படத்தில் மிகவும் ரசிக்கும்படியான ஒரு சீன் இருக்கும். தனது மனைவியுடன் சண்டை போடும் விஜய்சேதுபதி அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல் அந்த சீன் அமைக்கப்பட்டிருக்கும். திரையில் இந்த சீனை பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

இந்த சீனை பற்றி பிரபல சினிமா வலைத்தளத்தின் தொகுப்பாளர் ஒருவர், விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பி இருந்தர். இதற்கு விஜய் சேதுபதி அளித்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பெண்கள் பற்றியும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சமமான மரியாதை பற்றியும் அவர் கூறியிருக்கும் பதில் பெண்களிடம் கைத்தட்டல்களை வாங்கி உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close