Advertisment

Varisu Review Live: ஆட்டம்னு வந்துட்டா ஐயா கில்லி கில்லி மாதிரி

Varisu Movie Release and Review Live Update : விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 11) பிரம்மாண்டாக வெளியாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Varisu

Varisu review live

Tamil Movie Vijay Varisu Review Live Update : தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

Advertisment

தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 4-ந் தேதி வெளியாக வாரிசு படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்து.

இந்நிலையில், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாரிசு படம் நாளை (ஜனவரி 11) பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக படக்குழுவுக்கு முன்பே ரசிகர்கள் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விஜய் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



  • 15:01 (IST) 11 Jan 2023
    டபுள் பிளாக்பஸ்டர் ஹிட்

    எங்கும் பாசிட்டிவ் விமர்சனம்



  • 14:39 (IST) 11 Jan 2023
    கில்லி மாதிரி

    ஆட்டம்னு வந்துட்டா ஐயா கில்லி கில்லி மாதிரி



  • 14:36 (IST) 11 Jan 2023
    அந்த சத்தம்

    வாரிசு ட்வீட்டர் விமர்சனம்



  • 14:32 (IST) 11 Jan 2023
    ஈஸியா உங்கள அடிக்கலாம் பாரு

    வாரிசு படம் பிடிக்காத சில ரசிகர்கள் வாரிசு டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்



  • 14:30 (IST) 11 Jan 2023
    ரசிகர்கள் செம்ம காண்டுல இருகாங்க போல

    வாரிசு ரசிகர்கள் விமர்சனம்



  • 13:53 (IST) 11 Jan 2023
    குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி, பிளாக்பஸ்டர்

    தளபதியின் ஆல் செண்டர் அதகளம், அவர் திரையில் என்ன செய்தாலும் அது ஒரு வசீகரமாகவே இருக்கிறது, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி, பிளாக்பஸ்டர்



  • 13:35 (IST) 11 Jan 2023
    ஆக்‌ஷன் படங்களுக்கு மத்தியில்

    பல ஆக்‌ஷன் படங்களுக்கு மத்தியில் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு படமாக நடிக்க வேண்டும் என்ற தளபதி விஜய்யின் எண்ணம் அதிசயங்களைச் செய்திருக்கிறது. இயக்குனர் வம்சி மறக்கமுடியாத படத்தை உருவாக்கியுள்ளார்!



  • 13:00 (IST) 11 Jan 2023
    இது ஒன் மேன் ஷோ

    வாரிசு- ரொண்ட் 2. குறிப்பாக நீல நிற புல்லாங்குழல் நடனம், சிங்கிள் ஷாட் ரஞ்சிதமே , அவரது மேனரிஸம், அவரது ஸ்கீரின் பிரசன்ஸ் ஆகியவற்றால் படத்திற்கு அதிக மதிப்பு உள்ளது. காமிக் ஒன் லைனர்கள், தளபதி மூவி ரெஃபரென்ஸ். தீ தளபதி . இது ஒன் மேன் ஷோ. ஆம் அவர் ஆட்டநாயகன்



  • 12:54 (IST) 11 Jan 2023
    கொண்டாட்டம் ஆரம்பம்

    இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்



  • 12:34 (IST) 11 Jan 2023
    விண்டேஜ் தளபதி விஜய்

    வா தலைவா தலைவா, விண்டேஜ் தளபதி விஜய் மீண்டும் வந்துள்ளார். இயக்குனர் வம்சி எங்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கைக் கொடுத்தீர்கள்.



  • 12:31 (IST) 11 Jan 2023
    நடிகராக விஜய்யின் வாழ்க்கையில் ஒரு சிறந்த படம்

    வாரிசு ஒரு முழுமையான குடும்ப உணர்வுடன் முடிகிறது, நடிகராக விஜய்யின் வாழ்க்கையில் ஒரு சிறந்த படம், தமன் BGM மற்றும் இசை திரைப்படத்தின் முதுகெலும்பு, இயக்குனர் வம்சி இயக்குனராக வென்றார்



  • 12:29 (IST) 11 Jan 2023
    கண்ணீர் விட்ட இசையமைப்பாளர் தமன்

    வாரிசு படம் பார்த்துவிட்ட கண்ணீர் விட்ட இசையமைப்பாளர் தமன்



  • 12:27 (IST) 11 Jan 2023
    பேமிலி ஆடியன்ஸ்

    பேமிலி ஆடியன்ஸ் தலைல கட்டிட்டு பொறந்தவன்டா



  • 11:45 (IST) 11 Jan 2023
    க்ளைமேக்ஸ்-ல அழ வைத்திட்டாங்க

    படத்தில் உள்ள ட்விஸ்ட் நன்றாக உள்ளது. காமெடி, டான்ஸ், ஆக்ஷன், சென்ட்டிமென்ட் என எல்லாம் உள்ளது. க்ளைமேக்ஸ் சீன் நன்றாக உள்ளது. சென்ட்டிமென்ட் ஆக உள்ளது என்று ரசிகர்கள் கூறினர். wholesome entertainment ஆக உள்ளது என்றும் கூறினர்.



  • 11:41 (IST) 11 Jan 2023
    க்ளைமேக்ஸ்-ல அழ வைத்திட்டாங்க

    படத்தில் உள்ள ட்விஸ்ட் நன்றாக உள்ளது. காமெடி, டான்ஸ், ஆக்ஷன், சென்ட்டிமென்ட் என எல்லாம் உள்ளது. க்ளைமேக்ஸ் சீன் நன்றாக உள்ளது. சென்ட்டிமென்ட் ஆக உள்ளது என்று ரசிகர்கள் கூறினர். wholesome entertainment ஆக உள்ளது என்றும் கூறினர்.



  • 11:22 (IST) 11 Jan 2023
    ரோகிணி திரையரங்கில் படம் பார்த்த படக்குழு - தமன் கண்ணீர்

    ரோகிணி திரையரங்கில் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, இசையமைப்பாளர் தமன், ஷியாம் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் வாரிசு படம் பார்த்தனர். ரசிகர்கள் உற்சாகத்தில் இசையமைப்பாளர் தமன் உணர்ச்சி வசப்பட்டார்.



  • 11:00 (IST) 11 Jan 2023
    ரசிகர்களுடன் வாரிசு பார்த்த த்ரிஷா

    சென்னை மதுரவாயிலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகை த்ரிஷா வாரிசு திரைப்படம் பார்த்தார்.



  • 10:11 (IST) 11 Jan 2023
    அரசியல் இல்லை, பக்கா குடும்ப படம் - ரசிகர்கள் கருத்து

    வாரிசு படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் முழுக்க கலர்ஃபுல்லாக, அழகாக உள்ளது. படத்தில் அரசியல் இல்லை, பக்கா குடும்ப படமாக உள்ளது. விஜய்யின் காமெடி நன்றாக உள்ளது என ரசிகர்கள் கருத்து



  • 09:16 (IST) 11 Jan 2023
    விஜய்யின் Dance-யை ரசிப்பார்கள் - ரசிகர்கள் கருத்து

    படம் கலர்ஃபுல்லாக இருக்கிறார்.

    தளபதி Haters-கூட அவரின் Dance-யை பார்த்து ரசிப்பாங்க என வாரிசு குறித்து ரசிகர்கள் கருத்து



  • 08:32 (IST) 11 Jan 2023
    FDFS: அம்மா-மகன் சென்டிமென்ட் சூப்பர்

    அதிகாலை 4 மணிக்கு வெளியான வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டம். ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, பாடல் என அனைத்தும் நன்றாக உள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

    கூட்டு குடும்பம் பற்றிய படமாக உள்ளது. அப்பாதான் எங்களுக்கு ஹீரோ என்றார்.



  • 08:28 (IST) 11 Jan 2023
    FDFS: அம்மா-மகன் சென்டிமென்ட் சூப்பர்

    அதிகாலை 4 மணிக்கு வெளியான வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டம். ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, பாடல் என அனைத்தும் நன்றாக உள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

    கூட்டு குடும்பம் பற்றிய படமாக உள்ளது. அப்பாதான் எங்களுக்கு ஹீரோ என்றார்.



  • 08:03 (IST) 11 Jan 2023
    பக்கா கமெர்ஷியல் படம்: தளபதி அசத்திட்டாரு: ரசிகர்கள்



  • 20:47 (IST) 10 Jan 2023
    வாரிசு கொண்டாட்டம் ஆரம்பம்!

    விஜய் நடிப்பில் வாரிசு படம் நாளை வெளியாவதை முன்னிட்டு வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அயனாவரம் அரசு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.

    அதேபோல் விருத்தாச்சலம் பகுதியில் பலருக்கும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் ரத்ததானம் கொடுப்பவர்களுக்கு வாரிசு படத்தின் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:24 (IST) 10 Jan 2023
    க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் காய்ச்சலால் அவதிப்பட்ட விஜய் : குஷ்பு தகவல்

    விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்த நடிகை குஷ்பு ஒரு பேட்டியில், “வாரிசு படத்தின் க்ளைமாக்ஸ் படப்பிடிப்பின் போது, ​​விஜய் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். அருகில் உள்ள கேரேஜில் ஓய்வெடுத்து படப்பிடிப்பை முடித்தார். முழு காட்சியையும் முடித்த பிறகுதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறியுள்ளார்.



  • 19:22 (IST) 10 Jan 2023
    வாரிசு படத்தின் அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு தடை

    ஜனவரி 13ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை விஜய்யின் வாரிசு படத்தின் அதிகாலை 4 மணி மற்றும் அதிகாலை 5 மணி காட்சிகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. திரையரங்குகளுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள படத்தின் பேனர்களில் நடிகர்களின் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யயும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 19:20 (IST) 10 Jan 2023
    கேரளாவில் 400+ திரைகளில் வாரிசு வெளியீடு

    கேரளாவில் மொத்தம் 643 திரைகள் உள்ள நிலையில், இதில் 400+ திரைகளில் வாரிசு வெளியாகும் என்று வர்த்தக ஆய்வாளர் ஸ்ரீதர் பிள்ளை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.



  • 19:19 (IST) 10 Jan 2023
    வாரிசு படம் கர்நாடகாவில் 81,500 டிக்கெட்டுகளை விற்றுள்ளதாக தகவல்

    கர்நாடகாவில் டிக்கெட் விற்பனையைக் கண்காணிக்கும் கர்நாடகா டாக்கீஸின் ட்விட்ர் பதிவில், வாரிசு படம் 81,000 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்றுள்ளதாகக் கூறுகிறது. கர்நாடகாவில் வாரிசு 81,500+ டிக்கெட்டுகளை ₹2 கோடி மதிப்பிலான விற்பனை செய்துள்ளது" என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது.



  • 19:17 (IST) 10 Jan 2023
    வாரிசு படத்தின் ரன்னிங் டைம் அப்டேட்

    வாரிசு படத்தின் ரன்னிங் டைம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் 1 மணி நேரம் 29 நிமிடமும், செகண்ட் ஆஃப் 1 மணி நேரம் 20 நிமிடம் என படம் மொத்தம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.



Tamil Cinema Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment