Advertisment

நடிகர் சங்கத் தேர்தல்: பாண்டவர் அணி வெற்றி

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Actors Union Elections, Paandavar Team, Swami Sankaradhass team, Tamil cinema, Vishal, நடிகர் சங்கத் தேர்தல், துணைத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம், பதிவான வாக்குகளைவிட அதிக வாக்குகள், ஐசரி கணேஷ் புகார், பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி, Actors Union Elections vote counting, vote counting stop for vice president, Isari Ganesh complaint

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது.

Advertisment

2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்த நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிட்டன. 2019ம் ஆண்டு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டதாகவும் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாகவும் இது தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் 2 ஆண்டுகளுக்கு மேலாக வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன. பிப்ரவரி 23ம் தேதி நடிகர் சங்கத் தொடர்பாக அனைத்து வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சரியாக இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர், சுவாமி சங்கரதாஸ் அணியில் போட்டியிடும் ஐசரி கணேஷ், பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்னரே வந்தனர். வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடிகர் சங்கத் தேர்தலில் 1,604 வாக்குகள் பதிவாகி உள்ளன. அதன்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இருப்பினும், பிறகு,

துணைத்தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதாக சுவாமி சங்கரதாஸ் அணியின் தலைவர் ஐசரி கணேஷ் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, துணைத் தலைவர் பதவிக்கான நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இருப்பினும், பின்னர், தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. அதன்படி, பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1701 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் பாக்யராஜ் 1054 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

பாண்டவர் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால், 1720 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து, சுவாமி சங்கரதாஸ் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் 1032 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

அதே போல, பாண்டவர் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தி 1827 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியின் பிரசாந்த் 919 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

பாண்டவர் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் 1,605 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பூச்சி முருகன், அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியின் குட்டி பத்மினி 1015 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

பாண்டவர் அணியில் மற்றொரு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1,612 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பூச்சி முருகன், அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணியின் உதயா ஏ.எல் 973 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம், நடிகர் சங்கத் தேர்தலில், பாண்டவர் அணி தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் என அனைத்து பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment