actress abinavya Tamil News: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம்பேசுதடி சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் நடிபவர் தான் நடிகை அபிநவ்யா. செய்திவாசிப்பாளராக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய இவர் தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே, சன்டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியலில் ஸ்வாதியாகவும், கண்மணி சீரியலில் சினேகா கதாப்பாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர்.

சீரியல் நடிகர் தீபக்குமாரை கடந்த ஒருவருடமாக காதலித்து வரும் அபி நவ்யா அவருடனான காதல் குறித்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், கடந்த ஓராண்டாக தன்னுடைய பெஸ்டாக இருந்ததற்கு நன்றி எனக் கூறியுள்ளார். “உன்னை எப்போது காதலித்து கொண்டே இருக்க வேண்டும், உன்னுடனேயே இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “உன்னை நன்றாக பார்த்துக்கொள், எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இரு, இன்றைய நாளில் கடந்த ஓராண்டாக நான் இணைந்து பயணிக்க தொடங்கிய நாளை எட்டியுள்ளோம். மகிழ்ச்சியாக உள்ளது. உன்னை காதலிக்கப் பெற்றது என்னுடைய வரம், இதேபோல் என்றென்றும் இருக்க வேண்டும்” என தன்னுடைய காதலையும், அன்பையும், இதயப்பூர்வமாக வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த பதிவிற்கு தன் பங்குக்கு காதலியை புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் காதலை வார்த்தைகளால் விவரித்துள்ளார் நடிகர் தீபக். அந்த பதிவில் அவர், “இந்த ஓராண்டு பயணம்போல் இன்னும் பல ஆண்டுகள் வர இருக்கிறது, என்றென்றும் உன்னை காதலிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். சிம்பிளாக சொல்லியிருந்தாலும், காதலின் ஆழத்தை வார்த்தைகளே உணர்த்தி விடுகின்றன. இருவரையும் ஒருசேர இப்போது ரசிகர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலயில், இந்த காதல் ஜோடிக்கு நடந்த நிச்சயதார்த்த வீடியோவை நடிகை அபி நவ்யா சமீபத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், மண வாழ்க்கையில் விரைவில் அடியெடுத்து வைக்கவுள்ள இந்த ஜோடியை ரசிகர்கள் வாழ்த்து வருகின்றனர்.
நடிகர் தீபக் குமார் கலர்ஸ் தமிழில் ஒளிப்பராகிய திருமணம் சீரியலில் நடித்து பிரபலமானவர். தற்போது ஜீ தமிழின் ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் நடித்து வருகிறார். மேலும், சின்னத் திரையில் அனைவராலும் கவனிக்கபடக்கூடிய ஒரு நடிகராகவும் அவர் வளர்ந்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil