Advertisment

ரோஜா சீரியலுக்கு திரும்பி வரும் ஐஸ்வர்யா… சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

Actress aishwarya re entry in roja serial: இந்த சீரியலில் முன்பு நடித்த ஐஸ்வர்யா மீண்டும் ரோஜாவில் நடிக்க வருகிறார். இந்த தகவல் வெளியானதால் ரசிகர்கள் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
ரோஜா சீரியலுக்கு திரும்பி வரும் ஐஸ்வர்யா… சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ரோஜா. தமிழ் தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் முன்னனியில் இந்த ரோஜா சீரியல் உள்ளது. இதுவரை 850 எபிஷோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

Advertisment

இந்த சீரியலில் பிரியங்கா, வடிவுக்கரசி, டாக்டர் ஷர்மிளா, கவிதாலயா கிருஷ்ணன் மற்றும் ஷாம்லி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலின் மூலக்கதை மட்டுமல்லாது, திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளால் ரசிகர்களை கட்டிபோட்டு வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் முன்பு நடித்த ஐஸ்வர்யா மீண்டும் ரோஜாவில் நடிக்க வருகிறார். இந்த தகவல் வெளியானதால் ரசிகர்கள் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment