Advertisment

பிரபல பாடகர் சுயம்வரம்: விஷால் பட நடிகைக்கு மாலை சூட்டினார்

ஆகன்ஷா பூரி தமிழில் வெளியா விநாயகர் பக்தி தொடரில் பார்வதி தேவியாக நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
பிரபல பாடகர் சுயம்வரம்: விஷால் பட நடிகைக்கு மாலை சூட்டினார்

தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாக அலெக்ஸ் பாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆகன்ஷா பூரி. தொடர்ந்து தாஹிர் என்ற படத்தில் நடித்த அவர், பிரைஸ் தி லார்ட் என்ற மலையாளப்படத்திலும், லடி என்ற கன்னட படத்திலும் நடித்திருந்தார்.

Advertisment

காலண்டர் கேர்ல்ஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்த இவர், கடைசியாக தமிழில் விஷால நடிப்பில் வெளியா ஆக்ஷன் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் பல இசை ஆல்பங்கள் மற்றும் சின்னத்திரையின் பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆகன்ஷா பூரி.

மேலும் தமிழில் வெளியா விநாயகர் பக்தி தொடரில் பார்வதி தேவியாக நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது பிரபல இந்தி பாடகரான மிகா சிங் திருமணத்திற்காக மணமகள் தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் நடைபெற்றது. இதில் 12 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற ஆகன்ஷா பூரி 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலுக்கு தேர்வானார்.

இதில் மிகா சிங் ஆகன்ஷா பூரிக்கு மாலை அணிவித்து தனது மனைவியாக தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ஆகன்ஷா பூரி மிகா சிங் எப்போதும் தனத வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது.

இந்தி கன்னடம் தெலுங்கு உள்ளிட் மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ள மிகா சிங், ஆகன்ஷாவுக்கும் தனக்கும் இடையே நட்பு மட்டுமே உள்ளது நாங்கள் நண்பர்களாகவே பழகுகிறோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment