Advertisment

ஹாரருக்கு ’நோ’! காமெடிக்கு ‘எஸ்’! அஞ்சலி...

அதிரடியாக ரூட்டை மாற்றியிருக்கிறார் அஞ்சலி. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anjali actress

நடிகை அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லிசா’.

Advertisment

ஹாரர் களத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருந்த இந்தப் படம் எதிர் பார்த்த வெற்றியைத் தரவில்லை. பெரும்பாலான விமர்சனங்கள் நெகட்டிவாகவே கிடைத்தன.

இந்நிலையில் தனக்கு ஹாரர் ஒத்து வராது என நினைத்தாரோ என்னவோ, அதிரடியாக ரூட்டை மாற்றியிருக்கிறார் அஞ்சலி.

இவர் அடுத்ததாக தன்னை மையப்படுத்தும் காமெடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இவர் 2013-ல் மிர்ச்சி சிவா மற்றும் வசுந்த்ராவை வைத்து ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

தவிர, அஞ்சலியின் நடிப்பில் நாடோடிகள் 2, சிந்துபாத் ஆகியப் படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Anjali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment