விக்ரம் மகன் துருவிற்கு ஜோடியாகிறாரா கவுதமி மகள் சுப்புலட்சுமி?

பாலா சூர்யாவின் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பரபரப்பாக ரீமேக் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ’அர்ஜூன் ரெட்டி’ தமிழ் வெர்ஷனான ’வர்மா’, வில் நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் ‘அர்ஜீன் ரெட்டி’. இளசுகளின் ஆல் டை ஃப்வரட் மூவியாக இந்த படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்கிறார். சமீபத்தில் வெளியான பாலாவின் நாச்சியார் திரைப்படம் கலவையான விமர்சனக்களை பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆச்சரியத்தோடு பார்க்கவும், பேசவும் வைத்துள்ளது.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிதாமகனான, நடிகர் விக்ரமின் மகன் துருவ் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகிறார். பாலா இயக்கும் ’அர்ஜூன் ரெட்டி’ தமிழ் வெர்ஷனில் துருவ் தான் ஹீரோ. ஆனால், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஹிரோயினின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

இந்தப் படத்தில் துருவ் ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த பாலா சூர்யாவின் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அது கைக்கொடுக்கவில்லை. பின்பு ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டேவே தமிழ் ரீமேக்கிலும் நடிக்க வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது

இந்நிலையில், தற்போது நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

×Close
×Close