செயலில் காட்டிய ஜோதிகா: தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ25 லட்சம் உதவி

தாய் சேய் நலப்பிரிவில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் சரவணன் வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.

Actress Jyothika donates Rs 25 lakhs to Rasa Mirasuthar government hospital

Actress Jyothika donates Rs 25 lakhs to Rasa Mirasuthar government hospital : நடிகை ஜோதிகா ”உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் பற்றி நிறைய கேள்விப்பட்டதுண்டு. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற படபிடிப்பின் போது நாங்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். அங்கே நாங்கள் பார்த்த காட்சிகள் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது.

Actress Jyothika donates Rs 25 lakhs to Rasa Mirasuthar government hospital

எனவே கோவிலுக்கு செல்ல மனம் இல்லாமல் அப்படியே திரும்பிவிட்டோம்.கோவிலுக்கு செய்யும் செலவினை பள்ளிகள் மற்றும் மருத்துவமனைக்கு செலவிடுங்கள்” என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. தஞ்சை பெரிய கோவில் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசினார் என்று அவர் மீது ஆன்லைனில் தாக்குதல்கள் நடைபெற்றது.

Actress Jyothika donates Rs 25 lakhs to Rasa Mirasuthar government hospital

மேலும் படிக்க : ஜோதிகா பேசிய கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்: சூரியா அறிக்கை

ஆனால் யாரும், அவர் மேற்கோள்காட்டிய தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பவில்லை. மேலும் ஜோதிகாவின் மதம் சார்ந்த நம்பிக்கைகள் குறித்தும் பல்வேறு விவாதங்களை முன் வைத்தனர். ஆனால் நடிகர் சூர்யா தன் மனைவியின் கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது. அவருடன் இந்த விவகாரத்தில் துணை நிற்கின்றோம் என்றும் அவர் அறிக்கை வெளியிட்டார்.

Actress Jyothika donates Rs 25 lakhs to Rasa Mirasuthar government hospital

ஜோதிகாவின் பேச்சு ஆன்லைனில் அடிக்கடி வரவும் அந்த மருத்துவமனையின் தரம் என்னவென்று வெட்டவெளிச்சமாகியது. புதர் மண்டியிருந்த மருத்துவமனையின் வளாகத்தை சுத்தம் செய்த போது பாம்புகள் வெளியேறிய அவலும் அங்கு அரங்கேறியது. .

மேலும் படிக்க : ஜோதிகா சுட்டிக் காட்டிய ”அந்த” மருத்துவமனையில் பிடிபட்ட நச்சு பாம்புகள்!

அந்த மருத்துவமனையில் போதுமான அத்தியாவசிய உதவிகள் கிடைக்கப்பெறாமல் பலரும் கஷ்டப்படுகின்றனர் என்பதை கேட்டு அறிந்தார் ஜோதிகா. அவர்களுக்கு உதவும் விதமாக அந்த மருத்துவமனை தேவைகளுக்காக ரூ. 25 லட்சம் நித்இ உதவி வழங்கியுள்ளார்.

 

Actress Jyothika donates Rs 25 lakhs to Rasa Mirasuthar government hospital

மேலும் தாய் சேய் நலப்பிரிவில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் சரவணன் வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். ”செயல் தான் ஆகச்சிறந்த சொல்” என்று தன்னுடைய செயலால் நிரூபித்திருக்கிறார் ஜோதிகா என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress jyothika donates rs 25 lakhs to rasa mirasuthar government hospital tanjore

Next Story
மீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்vijay fans, vijay makkal iyakkam, vijay fans complaints against meera mitun, bigg boss celebrity meera mitun,மீரா மிதுன், விஜய், விஜய் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் மீரா மிதுன் மீது காவல்துறையிடம் புகார், meera mitun criticise vijay and his wife, meera mitun criticise vijay and surya, vijay fans gives police complaints against meera mitun, tamil cinema news, latest tamil cinema news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com