Advertisment

பாரிஸ் பாரிஸ் : டிரெய்லர் வெளியான முதல் நாளே எழும்பிய சர்ச்சை...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
paris paris, பாரிஸ் பாரிஸ்

paris paris, பாரிஸ் பாரிஸ்

நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் டீசரில் இடம்பெற்ற ஒரு காட்சியால் தற்போது சர்ச்சையும் அக்காட்சிக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

Advertisment

இந்த படத்தில் விருதுநகரைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற பெண்ணாக நடித்துள்ள காஜல், ஒரு இளைஞரை காதலிக்கிறார். ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் திடீர் என காஜலின் காலதன் திருமணத்தை நிறுத்துகிறார்.

பின்னர் தேன்னிலவுக்காக இருவரும் இணைந்து புக் செய்திருந்த பாரிஸ் நகருக்கு அவர் மட்டும் தனியாக செல்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் அனுபவங்களே படத்தின் கதை. ஏற்கனவே பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடிப்பில் வெளியான குயின் படத்தின் ரீமேக் தான் இந்த பாரிஸ் பாரிஸ்.

பாரிஸ் பாரிஸ் சர்ச்சை

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காஜலின் நடிப்பு ஆஹா அற்புதம் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா, கன்னட ரீமேக்கில் பருல் யாதவ், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படங்களின் டீசரும் நேற்று வெளியானது.

ஆனால் தமிழில் காஜல் அகர்வால் டீசரில் மட்டும் சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று இடம்பெற்றது. காஜலுக்கு புதிதாக பாரிஸில் கிடைக்கும் தோழியும் இணைந்து தோன்றும் அந்த காட்சியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் பலரையும் கவர்ந்த இந்த டீசர் தற்போது சர்ச்சையையும் எதிர்க் கொண்டு வருகிறது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment