Advertisment

நடிகை காஜல் அகர்வால் ஆப்பை பிரபலப்படுத்த புதிய முயற்சி

காஜல்அகர்வால் தன்னுடைய ஆப்பை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். தன்னுடைய ஆப்பை டவுன்லோட் செய்பவர்களுக்கு கையெழுத்திட்ட டீ சர்ட் கொடுக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kajal

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய ஆப்பை பிரபலப்படுத்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால். விரைவில் வரக் கூடிய விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்திலும் கதாநயகியாகவும் நடித்து வருகிறார். இந்தி படத்தில் அறிமுகமான இவர் தெலுங்கு, தமிழ் பட உலகிற்கு வந்தார். ஏற்கனவே விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய பெயரில் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதில் அவரைப் பற்றிய விபரங்கள் போட்டோக்கள் இடம் பிடித்துள்ளன. இதனை பிரபலப்படுத்த தன்னுடைய ரசிகர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

தன்னுடைய ஆப்பை டவுன்லோட் செய்யும் ரசிகர்களுக்கு தன்னுடைய கையெழுத்திட்ட டீ சர்டை அனுப்பி வைப்பதாக அவர் அறிவித்துள்ளார். இது எவ்வளவு தூரம் அவருடைய ஆப்பை பிரபலப்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment