நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரகு தாத்தா என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூரில் மால் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் பாடல் Vibe செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"லாங்க்வால்" என்ற மால் திறப்பு விழாவில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அப்போது, மேடையில் பேசிய பின், முரளி, மீனா நடித்த பொற்காலம் படத்தில் இடம் பெற்ற 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணித் தண்ணிய விட்டு' என்ற ஃபேமஸ் பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
வீடியோ: நியூஸ்18 தமிழ்நாடு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“