Advertisment

'வாரிசு' குடும்பத்தில் இணைந்த குஷ்பூ: விஜய்- ராஷ்மிகாவுடன் கியூட் செல்ஃபி

ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வரும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
'வாரிசு' குடும்பத்தில் இணைந்த குஷ்பூ: விஜய்- ராஷ்மிகாவுடன் கியூட் செல்ஃபி

விஜய் நடிப்பில் தற்போது நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் வாரிசு படம் குறித்து நடிகர் குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம், யோகி பாபு, பிரபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு 2023 ஜனவரி மாதம் வாரிசு படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு விஜய் குடும்ப கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதகரித்துள்ள நிலையில், தற்போது நடிகர் குஷ்பு, நடிகர் விஜய் மற்றும் நாயகி ராஷ்மிகா மந்தனாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவில், இந்த குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இது பற்றி நான் பேச தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வாரிசு படத்தில் நடிகை குஷ்பு ஒரு கேரக்டரில் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில், விரைவில் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் வாரிசு படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் முதல்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் வம்சி தமிழில் கார்த்தி நாகர்ஜூனா நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Khushbu Sundar Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment