scorecardresearch

சகோதரர் உயிரிழப்பு.. கடும் சோகத்தில் குஷ்பு.. ட்விட்டரில் உருக்கமான பதிவு

நடிகை குஷ்புவின் சகோதரர் உயிரிழந்துள்ளார். இதனை அவர் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சகோதரர் உயிரிழப்பு.. கடும் சோகத்தில் குஷ்பு.. ட்விட்டரில் உருக்கமான பதிவு

நடிகை குஷ்பூவின் மூத்த சகோதரர் கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிவந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணித்துள்ளார். இதனை நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிவடைந்தது. அவனின் அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவரும் நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை அரசியல்வாதி என பல்துறையிலும் இயங்கக் கூடியவர் குஷ்பு. இவர் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சி, சோகம், சமூக கருத்துகள் என அனைத்தையும் பகிர்ந்துவருவார். இந்த நிலையில் அவரது மூத்த சகோதரனின் மரணம் அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress kushboo elder brother passes away