Advertisment

இவர்களை பார்க்கும்போது எனது குழந்தை பருவம் நினைவுக்கு வருகிறது : நடிகை குஷ்பு சிறப்பு பேட்டி

கடந்த 2000-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி திருமணம் செய்துகொண்ட குஷ்பு தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

author-image
D. Elayaraja
New Update
சகோதரர் உயிரிழப்பு.. கடும் சோகத்தில் குஷ்பு.. ட்விட்டரில் உருக்கமான பதிவு

1988-ம் ஆண்டு ரஜினிகாந்த் பிரபு நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை குஷ்பு. தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

Advertisment

கடந்த 2000-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி திருமணம் செய்துகொண்ட குஷ்பு தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கியள்ள குஷ்பு இடையில் சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் ஜீ தமிழின் ஹிட் ஷோவான சூப்பர் மாம் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடுவராக பங்கேற்றுள்ள நடிகை குஷ்புவிடம் இந்த நிகழ்ச்சி தொடர்பாக சில கேள்விகளுடன் அவரை தொடர்புகொண்டோம்.

சூப்பர் மாம் நிகழ்ச்சி பற்றிய கருத்து

சூப்பர் மாம் எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி. ஏன்னென்றால் நானே ஒரு அம்மா சின்ன வயதில் இருந்து மற்ற இடங்களில் போட்டிகளில் பங்கேற்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருப்பது சந்தோஷம். இது போட்டி மட்டுமல்ல ஒரு தாய் தனது குழந்தையை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் அதேபோல் ஒரு குழந்தை தனது தாய்யை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் என்பதை உணர்த்துவது.

publive-image

குழந்தைகள் எந்த வயதாக இருந்தாலும் அவர்கள் தங்களது அம்மாவிடம்தான் இருப்பார்கள். அதனால் நான் நடுவராக இருந்து அவர்களுடன் என்னை கனக்ட் பண்ணிக்க முடிந்தது. நான் உண்மையாகவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். தொடர்ந்து சூப்பர் மாம் நிகழ்ச்சி குறித்து பேசிய அவர், எல்லாருமே என்னை பார்த்தால் நான்தான் சூப்பர் மாம் என்று சொல்வார்கள். இந்த வார்த்தைகளை கேட்டும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று கூறினார்.

ஒரு தாய் தனது குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்?

ஒரு தாய் தனது குழந்தையை புரிந்துகொண்டு அந்த குழந்தையின் மனநிலைமைக்கு ஏற்றபடி இருக்க வேண்டும். ஏன்னென்றால் என் குழந்தையை இப்படி வளர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு தாய்க்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். இருந்தாலும் குழந்தையின் மனநிலைமைக்கு முக்கியத்துவம் அளிப்பது தான் எனக்கு முக்கியமாக தெரிகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நிகழ்ச்சியில் குழந்தைகளை பார்க்கும்போது உங்களது குழ்தை பருவ நினைவுகள் வருகிறதா?

இவர்களுடன் இருக்கும்போது என் அம்மாவுடன் நான் இருந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. என்ன வயது ஆனாலும் அம்மாவுடன் ஸ்பெண்ட் பண்ண டைம் உங்களால் மறக்கவே முடியாது. அந்த நாட்கள் நம் அனைவருக்குமே ரொம்ப ஸ்பெஷல். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அந்த நாட்கள் என் நினைவுக்கு வருகிறது. நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.

குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள், நிறைய குழந்தைகள் அவங்க அம்மாவை கலாய்ப்பாங்க இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப ஜாலியா இருக்கு. குழந்தைகள் கடவுளுக்கு சமமானவர்கள் அவர்களுக்கு பொய் சொல்ல தெரியாது. சில நேரங்கள் அம்மா எதாவது சொன்னாலும் குழந்தைகள் அம்மா பொய் சொல்றாங்கனு சொல்லிடுவாங்க. இதை பார்க்கும்போது ரொம்ப கியூட்டா இருக்கும்.

publive-image

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு தீர்வு என்ன நினைக்கிறீகள்?

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சட்டத்தை இன்னும் வலிமைபடுத்தாவரை இது நடந்துகொண்டுதான் இருக்கும். சட்டத்தின் மேல் பயம் கிடையாது. தவறு செய்தால் கொஞ்ச நாளில் வெளியில் வந்துவிடலாம். நம்மை பிடிக்க முடியாது என்நு நினைத்துக்கொண்டு இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இந்த மாதிரி குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களின் வளர்ப்பு சரியில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பெண்களிடம் இப்படித்தான் நீ நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதை விட ஆண் பிள்ளைகளை வளர்ககும்போது நீ பெண்களிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். இதுதான் மிகவும் முக்கியம். ஆனால் இதை யாரும் செய்வதில்லை.

வீட்டில் ஆண்கள் நடந்துகொள்வதை பார்த்து ஆண் பிள்ளைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் இது நமது உரிமை என்று அவர்கள நினைக்கிறார்கள். ஆனால சின்ன வயதில் ஒரு தப்பு நடக்கும்போது அதை தட்டி கேட்டுவிட்டால் இந்த பிரச்சினை இருக்காது என்று கூறியுள்ளார்.

திரை மற்றும் அரசியல் எப்படி மேனேஜ் செய்கிறீர்கள்?

தற்போது சீரியல் மற்றும் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். அரசியல் மற்றும் சினிமா குறித்து பேசிய போது முயற்சி செய்தால் முடியாதது இல்லை. எனக்கு மல்டி டாஸ் டேலண்ட் இருக்கு. சில சமயங்களில் சோர்வு இருக்கும். ஆனால் மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment