Advertisment

கழுத்தில் மலைப் பாம்பு: கமல்ஹாசன் பட நடிகை செம்ம தில்லு போட்டோ ஷூட்

இந்திய சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு சீன திரைப்படங்களிலும் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் ஜாக்கி சானுடன் இணைந்து ‘தி மித்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Malliga Sherawat

மல்லிகா ஷெராவத்

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சிய நாயகியாக வலம் வரும் நடிகை மல்லிகா ஷெராவத் தனது கழுத்தில் மலைப்பாம்புடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் மல்லிகா ஷெராவத்.பாலிவுட் சினிமாவில் ‘குவாஹிஷ்’, ‘மர்டர்’ போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்திய சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு சீன திரைப்படங்களிலும் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் ஜாக்கி சானுடன் இணைந்து ‘தி மித்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், தமிழில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து பட்டையை கிளப்பிய தசவதாரம் படத்தில் வில்லன் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் கலாசலா பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்த மல்லிகா ஷெராவத் தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மல்லிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் அவர் வெளியிடும் பிகினி புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகை மல்லிகா ஷெராவத் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், தன்னுடைய கழுத்தில் மலைபாம்பை சுற்றி வைத்துக்கொண்டு அதோடு கொஞ்சி விளையாடுகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment