பிறந்த நாளில் ரஜினிகாந்தை சந்தித்த லாரன்ஸ்
ருத்ரன், சந்திரமுகி 2 என பிஸியாக நடித்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லாரன்ஸ், என்னுடைய பிறந்த நாளில் தலைவர் ரஜினிகாந்திடம் ஆசி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது சேவை செய்வேன். பசியின் முக்கியத்துவம் அறிந்ததால் இம்முறை அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளேன். நேராடியாக சென்று அனைவருக்கும் உணவளிக்க இருக்கிறேன். உங்களின் ஆசீர்வாதம் தேவை என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி படம் ரிலீஸ் தள்ளிவைப்பு
இந்தியின் அந்தாதூன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கி வரும் மேரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் 23-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் வெளியீடு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.
துணிவு படத்தின் அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியார்
அஜித் இயக்குனர் எச்.வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இதனிடையே துணிபு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில், நடிகை மஞ்சுவாரியார் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். துணிபு படத்திற்காக தான் டப்பிங் பேசும் புகைப்படத்தை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமந்தாவுக்கு கீர்த்தி சுரேஷ் ஆறுதல்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா தற்போது அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நோய் குணமாக பல நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் நோயில் இருந்து விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று சமந்தா கூறியிருந்த நிலையில், தற்போது சமந்தாவுக்கு கீர்த்தி சுரேஷ் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உனக்கு அதிகமான சக்தி உள்ளது. விரைவில் குணமடைந்து வலிமையோடு திரும்பி வருவாய் என்று கூறியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
கைதி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அர்ஜூன் தாஸ் தற்போது அநீதி என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அங்காடித்தெரு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“