தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத் குமார், சத்திய ராஜ் என ஒரு ரவுண்ட் வந்தவர் மீனா.
இவர் ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக பரவலாக அறியப்பட்டார். அந்தப் படம் குறித்து ராஜ் கிரண் பேசுகையில், “மீனா நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.
அவரிடம் உள்ள டெடிகேசனை நிகழ்கால நடிகைகளிடம் பார்க்க முடியாது. ஒருமுறை பாடல் காட்சி ஒன்று உடை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எதையும் யோசிக்காமல் காரின் மறைவில் நின்று உடை மாற்றினார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து மீனா குறித்து ராஜ்கிரண் பேசுகையில், “அவர் தன்னை சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் பார்த்து பயப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார். ராஜ்கிரணின் இந்தப் பேச்சுகள் தற்போது வைரலாகிவருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“