Advertisment

ஆனாலும் பூனைக்கு இவ்வளவு செல்லம் ஆகாதுப்பா!

பியார் பிரேமா காதல் ஹீரோயின் ரைசா தனது செல்லப் பூனை செய்த சேட்டை வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress Raiza Wilson shares cat kisses video, ரைசா வில்சன், நடிகை ரைசா வில்சன் பூனை முத்தமிட்ட வீடியோ, வைரல் வீடியோ, viral video, tamil viral news, tamil video nes, tamil viral video news, cat kisses raiza wilson, pyaar prema kaadhal

actress Raiza Wilson shares cat kisses video, ரைசா வில்சன், நடிகை ரைசா வில்சன் பூனை முத்தமிட்ட வீடியோ, வைரல் வீடியோ, viral video, tamil viral news, tamil video nes, tamil viral video news, cat kisses raiza wilson, pyaar prema kaadhal

பியார் பிரேமா காதல் ஹீரோயின் ரைசா தனது செல்லப் பூனை செய்த சேட்டை வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

Advertisment

இயக்குனர் இளன் இயக்கத்தில், பியார் பிரேமா காதல் படத்தில் ஹிரோயினாக நடித்ததன் மூலம் நடிகை ரைசா வில்சன் தமிழ் சினிமாவில் தனது வரவை அழுத்தமாக பதிவு செய்தார். பியார் பிரேமா காதல் படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ரைசா, எஃப்.ஐ.ஆர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்திற்கு அடுத்து, அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகவிருக்கிறார்.

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம்தான் ரைசா சினிமாவில் பிரபலமானார் என்றாலும், அவர்அதற்கு முன்பே பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அறிமுகமாகி இருந்தார். ஆனால், அவர் போட்டி விதிகளின்படி சில நாட்களிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 

View this post on Instagram

 

I’m missing this cat so so much and She doesn’t even know it ????????

A post shared by Raiza Wilson (@raizawilson) on

நடிகை ரைசா வில்சன் தற்போது, தன்னுடைய செல்ல பிராணியான பூனை தனக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், ஆனாலும் இந்த பூனைக்கு இவ்வளவு செல்லம் ஆகாதுப்பா என்று கூறி லைக் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment