Advertisment

டீ-சர்ட்டை இப்படித்தான் போடணுமா? என்னம்மா... இப்படி பண்றிங்களேமா!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் குவாரண்டைன் காலத்தில், ஒரு புதிய வகையில் டீ-சர்ட் அணிந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் டீ-சர்ட்டை இப்படித்தான் போடணுமா? என்னம்மா... இப்படி பண்றிங்களேமா! என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rakul preet singh, rakul preet singh father, t-shirt challenge, rakul preet singh fitness, ரகுல் ப்ரீத் சிங், ரகுல் ப்ரீத் சிங் டீ-சர்ட் அணியும் சவால், ரகுல் ப்ரீத் சிங் ஃபிட்னஸ் சவால், fitness goals, indianexpress.com, indianexpress, rakul preet singh fitness motivation, quarantine life, quarantine fitness, lockdown fitness, ரகுல் ப்ரீத் சிங் வைரல் வீடியோ, army man father, rakul preet news, rakul preet singh pics, yoga, handstand benefits, ரகுல் ப்ரீத் சிங் சவால், ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராம், handstand challenge

rakul preet singh, rakul preet singh father, t-shirt challenge, rakul preet singh fitness, ரகுல் ப்ரீத் சிங், ரகுல் ப்ரீத் சிங் டீ-சர்ட் அணியும் சவால், ரகுல் ப்ரீத் சிங் ஃபிட்னஸ் சவால், fitness goals, indianexpress.com, indianexpress, rakul preet singh fitness motivation, quarantine life, quarantine fitness, lockdown fitness, ரகுல் ப்ரீத் சிங் வைரல் வீடியோ, army man father, rakul preet news, rakul preet singh pics, yoga, handstand benefits, ரகுல் ப்ரீத் சிங் சவால், ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராம், handstand challenge

யுவன், தடையறத் தாக்க, தீரன் அதிகாரம், தேவ் ஆகிய படங்களில் நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் குவாரண்டைன் காலத்தில், ஒரு புதிய வகையில் டீ-சர்ட் அணிந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் டீ-சர்ட்டை இப்படித்தான் போடணுமா? என்னம்மா... இப்படி பண்றிங்களேமா! என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு தவிர அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த குவாரண்டைன் காலத்தில் சினிமா நடிகர்கள், நடிகைகள் கொரோனாவைரஸ் பற்றிய விழிப்புணர்வு விடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சில நடிகைகள் உடற்பயிற்சி சவால், டான்ஸ் சவால்களை சமூக ஊடகங்களில் விடுத்து வருகின்றனர்.

இதனால், சமூக ஊடகங்கள் சினிமா பிரபலங்களின் உடற்பயிற்சி வீடியோக்களால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், மிகவும் சுவாரஸியமாக சினிமா பிரபலங்களான தந்தை - மகள் ஒரு வித்தியாசமான சவால் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறாது. அந்த தந்தை - மகள் சினிமா பிரபலம் வேறு யாரும் இல்லை.

தமிழில், யுவன், தடையறத் தாக்க, தீரன் அதிகாரம், தேவ் ஆகிய படங்களில் நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் அவரது தந்தை நடிகர் ராஜேந்தர் சிங் இருவரும்தான். ரகுல் ப்ரீத் சிங் வழக்கமான முறையில் டீ-சர்ட் அணியாமல் வித்தியாசமான முறையில் டீ-சர்ட் அணியும் சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை ஏற்ற அவரது தந்தை ராஜேந்தர் சிங்கும் செய்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் வழக்கமாக டீ-சர்ட் அணியும் முறையில் டீ-சர்ட் அணியாமல் வித்தியாசமான முறையில் அணிந்த சவால் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ரகுல் ப்ரீத் சிங் தனது இரண்டு கால்களையும் உயர தூக்கி சுவற்றில் வைத்துக்கொண்டு கைகளால் தரையை ஊன்றி நிற்கிறார். பின்னர், டீ-சர்ட்டை எடுத்து ஒரு கையை மெல்ல எடுத்து டீ-சர்ட்டுக்குள் நுழைத்து தலையில் மாட்டுகிறார். பின்னர், அந்த கையை தரையில் ஊன்றிக்கொண்டு மற்றொரு கையை எடுத்து டீ-சர்ட்டுக்குள் நுழைத்து வெற்றிகரமாக டீ-சர்ட்டை மாட்டுகிறார். பின்னர், கீழே இறங்கி செல்கிறார்.

இப்படி வித்தியாசமாக டீ-சர்ட் அணியும் சவால் வீடியோ பற்றி ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாமிராம் பக்கத்தில் குறிப்பிடுகையில், வழக்கமான முறையில் என்னுடைய டீ-சர்ட் அணிவது போரடித்தது. குவாரண்டைன் காலத்தில், வீக் எண்ட் சேலஞ்ச் என்று ஹேஷ் டேக் செய்து உங்கள் எல்லோருக்கும் செய்வதற்கான் ஒரு டாஸ்க் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது ஒரு உயரமான சுப்பர் பிளாங்க் போன்றது. ஆச்சரியாமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு தனது நண்பர்களை டேக் செய்து, புதிய முறையில், டீ-சர்ட் அணியும் சவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சவாலை ஏற்று அவரது தந்தை ராஜேந்தர் சிங்கும் செய்ததாக ரகுல் ப்ரீத் சிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

publive-image நடிகை ரகுல் ப்ரீத் சிங் தந்தை ராஜேந்தர் சிங்

இந்த சவாலை அனைவராலும் செய்ய முடியாது. கால்களை உயரத்தூக்கி கைகளால் நிற்கும்போது சிறிது உறுதியில்லாமல் கைகளை விட்டாலும் பெரிய அளவில் அடிபடும் ஆபத்து உள்ளது. அதனால், இந்த ஆபத்தான சவாலை வேடிக்கையானதாக கருதி தவிர்ப்பது நல்லது. இந்த ஆபத்தான சவால் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர்,‘டீ-சர்ட்டை இப்படித்தான் போடணுமா? என்னம்மா... இப்படி பண்றிங்களேமா! என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment