Advertisment

நேஷ்னல் க்ரஷ்னா அது நீங்கதான்... ராஷ்மிகா ரீசன்ட் க்ளிக்ஸ்

சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும், குட்பாய் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார் ராஷ்மிகா.

author-image
WebDesk
New Update
நேஷ்னல் க்ரஷ்னா அது நீங்கதான்... ராஷ்மிகா ரீசன்ட் க்ளிக்ஸ்

கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.  முதல் படத்திலேயே பிரபலமான இவர், அடுத்து புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான அஞ்சானி புத்ரா படத்தில நடித்தார்.

Advertisment
publive-image

தொடர்ந்து 2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சலோ என்ற படத்தில் நடித்த ராஷ்மிகா தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தார்.

publive-image

இந்த படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் ஏராளமான ரசிகர்களை பெற்ற தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

publive-image

இடையில் சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும், குட்பாய் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார் ராஷ்மிகா.

publive-image

தற்போது அனிமல் என்ற இந்தி படத்திலும், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தின் 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார். இவரின் படங்கள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றதால் திருமணத்தை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராஷ்மிகா தற்போது அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

publive-image

அந்த வகையில் தற்போது ராஷ்மிகா ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment