கமல்ஹாசனுக்கு முத்தம் தர மறுத்த வாரிசு நடிகை யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசனை முத்தம் கொடுக்க மறுத்த நடிகை நிரோஷா பற்றி இயக்குனர் சித்ரா லட்சுமணன் கூறிய இந்த சுவாரசிய சம்பவம் நெட்டிசன்களை ஈர்த்துள்ளது.

By: Updated: May 16, 2020, 10:30:59 PM

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி 60 ஆண்டுகளை நிறைவு செய்து வைர விழா கொண்டாடியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய கமல்ஹாசனின் பயணம், பல மைல்கல் சாதனைகளுடன் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கமல்ஹாசன் சினிமா துறையில், நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை வெளிப்படுத்தியவர். பலர் சினிமா துறைக்குள் நுழைவதற்கு உந்துசக்தியாக இருப்பவர். சினிமாவில் சாதித்த கமல்ஹாசன் இப்போது அரசியலில் நுழைந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் அரசியலில் மையத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்.

சினிமாவில் கமல்ஹாசனின் நடிப்பு அவரது திறமைகளைப் பாராட்டும் ரசிகர்கள் பலரும் அவருடைய பல படங்களில் வரும் முத்தக்காட்சியை விமர்சனமாக முன்வைப்பது உண்டு. தமிழ் சினிமாவில் அதிகமான முத்தக் காட்சிகளில் நடித்த நடிகர் யார் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டால் நிச்சயமாக அது கமல்ஹாசனாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு அவருடைய பல படங்களில் முத்தக் காட்சி இடம்பெற்றிருக்கும். இவருடைய படத்தில் ஹீரோயினா நடித்த நடிகைகளில் முத்தக் காட்சியில் நடிக்காத நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து சூரசம்ஹாரம் படத்தை இயக்கிய சித்ரா லட்சுமணன், ஒரு சுவாரசியமான சம்பத்தை ஒரு யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர், இயக்குனர் சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாகவும் நடிகை நிரோஷா கதாநாயகியாகவும் நடித்து வெளியான படம் சூரசம்ஹாரம். நடிகை நிரோஷா பழம்பெரும் நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள்.

சூரசம்ஹாரம் படத்தை இயக்கிய இயக்குனர் சித்ரா லட்சுமணம் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சூரம்சம்ஹாரம் படத்தை இயக்கும்போது, படத்தின் கதைப்படி நிரோஷா கமலுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டும். அந்தக் காட்சி அமைப்பை இயக்குனர் சித்ரா லட்சுமணன் நிரோஷாவுக்கு விளக்கியுள்ளார்.

அந்த நேரத்தில் முதலில் ஒப்புக்கொண்ட நிரோஷா, அந்த காட்சி படப்பிடிப்பு நடக்கும்போது, கமலின் உதடுவரை வந்த நிரோஷா “சாரி சார் என்னால் முத்தம் கொடுக்க முடியாது” என்று கூறிவிட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த படக்குழு அதிர்ச்சியடைந்து நிரோஷாவை சமாதானப்படுத்தியுள்ளது. ஆனாலும், நிரோஷா அந்த முத்தக் காட்சியில் நடிக்க சம்மதிக்காததால், அந்தப் படம் ஒரு மாதம் நடக்கவில்லை.

அதன்பிறகு, நிரோஷாவின் அம்மா இயக்குனர் சித்ரா லட்சுமணனை சமாதானம் செய்து அந்த படம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், கடைசிவரை அந்தப் படத்தில் முத்தக் காட்சி படப்பிடிப்பு செய்யவில்லை. கமல்ஹாசன் உத்தரவால் அந்தப் படம் முத்தக் காட்சி இல்லாமலேயே படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனை முத்தம் கொடுக்க மறுத்த நடிகை நிரோஷா பற்றி இயக்குனர் சித்ரா லட்சுமணன் கூறிய இந்த சுவாரசிய சம்பவம் நெட்டிசன்களை ஈர்த்த்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Actress refused to kiss kamal haasan in cinema shooting director chithra lakshmanan interview

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X