Advertisment

ரீல் ஷோ; நிஜம் இல்லை… விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியை போட்டு உடைத்த சீரியல் நடிகை!

நடிகை ரித்திகா விஜய் டிவிவியின் புதிய நிகழ்ச்சியை நிஜம் இல்லை ரீல் ஷோ என்று போட்டுடைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
vijay tv, comedy raja kalakkal rani, விஜய் டி, காமெடி ராஜா கலக்கல் ராணி, பிபி ஜோடிகள், ரித்திகா, பாலா, பழைய ஜோக் தங்கதுரை bb jodigal, rithika, bala, thangadurai

விஜய் டிவி அண்மையில் சில புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுவரையில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து BB ஜோடிகள் (பிக் பாஸ் ஜோடிகள்) என்ற புது நிகழ்சி தொடங்கப்பட்டது. இதில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஜோடிகளாக நடனம் ஆடி அசத்தி வருகிறார்கள். பிபி ஜோடிகள் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisment

இதனுடன், காமெடி ராஜா, கலக்கல் ராணி என்ற புது நிகழ்ச்சியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், விஜய் டிவி நகைச்சுவை கலைஞர்கள் ஜோடியாக பிரபல சீரியல் நடிகைகளுடன் ஜோடியாக சேர்ந்து நகைச்சுவை செய்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளியில் ஜோடியாக இருந்து வந்த பாலா மற்றும் சீரியல் நடிகை ரித்திகா இருவரும் இந்த நிகழ்ச்சியில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். முதல் எபிசோடு ஒளிபரப்பான நிலையில் ரித்திகா இந்த நிகழ்ச்சி பற்றி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அதோடு, காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற முழுக்க முழுக்க ஸ்கிரிப்டட் ஷோ என இந்த நிகழ்ச்சியைப் பற்றிய உண்மையைக் கூறியுள்ளார்.

இது நடிகை குறித்து கூறியிருப்பதாவது: “நீங்கள் முதல் எபிசோடை ரசித்து பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட ஒரு காமெடி ஷோவில் நான் முதல் முறையாக பங்கேற்று இருக்கிறேன். அதனால் டிவியில் பார்க்கும் எதையும் நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் பார்ப்பது எடிட் செய்யப்பட்ட வீடியோ.

நானும் பாலாவும் அனைத்தை பற்றியும் பேசுவோம். திட்டமிட்டு இந்த ஸ்கிட்டை நடித்து காட்டுவோம். அதனால் எங்கள் ஜோடிக்கு ஆதரவு அளியுங்கள். என்னை பிடித்தவர்களுக்கு நன்றி, ஆனால் இந்த விஷயம் புரியாமல் எனக்கு நெகடிவ் கமெண்ட் கொடுப்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். கமான் மக்களே, இது வெறும் ரீல் ஷோ. நிஜ வாழ்க்கை இல்லை. பாசிட்டிவிட்டியை பரப்புங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் டிவியில் பிக் பாஸ், குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளும் ஹிட்டான நிலையில் அவை ஸ்கிரிப்டட் நிகழ்ச்சிகள் என்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், நடிகை ரித்திகா விஜய் டிவிவியின் புதிய நிகழ்ச்சியை நிஜம் இல்லை ரீல் ஷோ என்று போட்டுடைத்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment