தேர்வு எழுத கல்லூரிக்கு சென்ற சாய் பல்லவி; சுற்றி வளைத்து செல்ஃபி எடுத்த மாணவர்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் பிஸியாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி, தேர்வு எழுதுவதற்காக திருச்சியில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கே மாணவிகள் சாய் பல்லவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

actress sai pallavi, sai pallavi went to college to write exam, சாய் பல்லவி, தேர்வு எழுத கல்லூரிக்கு சென்ற சாய் பல்லவி, வைரல் புகைப்படம், திருச்சி, sai pallavi went to tiruchy college, sai pallavi went to write exam, sai pallavi photos with students goes viral, sai pallavi, tiruchy

தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் பிஸியாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி, தேர்வு எழுதுவதற்காக திருச்சியில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கே மாணவிகள் சாய் பல்லவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ககாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகத்துக்குள் நுழைந்த நடிகை சாய் பல்லவி, விரைவிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் வாய்ப்புகள் குவிய பிஸியாகிவிட்டார்.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் உடன் மாரி 2 படத்திலும், சூரியா உடன் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு நடிகையாக மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்ட சாய் பல்லவி மருத்துவம் படித்தவர். சினிமாவில் பிஸியாக் இருப்பதால் அவரால் மருத்துவம் செய்ய முடியவில்லை. இவருடைய மிகவும் எளிமையான தோற்றம் இளைஞர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி திருச்சியில் உள்ள எம்.ஏ.எம் கல்லூரிக்கு வருகை தந்துள்ளார். அந்த கல்லூரியில் நடந்த ஒரு தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதுவதற்காக சாய் பல்லவி வந்திருக்கிறார். சாய் பல்லவியைப பார்த்து ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்த மாணவர்கள், மாணவிகள் சாய் பல்லவியுடன் செல்ஃப் எடுத்துக்கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


திருச்சி எம்.ஏ.எம் கல்லூரிக்கு சென்ற சாய் பல்லவி, தேர்வு மையத்திற்கு உள்ளே செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முகக் கவசம் அணிந்துள்ள சாய் பல்லவி, “இன்னும் இருக்குல்ல்… 45 நிமிஷம்” என்று கூறுகிறார். அதர்கு தேர்வூ மையத்தில் இருக்கும் நபர், “இருக்கிறது, ஆனால் இப்போதே ரெடியா இருக்கு” என கூறுகிறார்.

சாய் பல்லவி தேர்வு தொடங்க 45 நிமிடம் இருக்கிறது என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காகத்தான் தேர்வு மையத்தில் இருப்பவரிடம் விசாரித்து இருக்கிறார்.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சாய் பல்லவிக்கு படிப்பின் மீதான் ஆர்வம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்பது அவர் தேர்வு எழுத சென்றிருப்பதில் இருந்து தெரிகிறது.

நடிகை சாய் பல்லவி தற்போது, தெலுங்கில் லவ் ஸ்டோரி, விராட பருவம் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். லவ் ஸ்டோரி படத்தில் நாகை சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள படப்பிடிப்புகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress sai pallavi went to write exam to tiruchy college photos with students goes viral

Next Story
இவங்க தான் சின்னத்திரை த்ரிஷாவாம்: டாம் பாய் டூ டிரடிஷனல் தேவதை ஆயிஷா!Zee Tamil Sathya Serial Ayesha, Tamil Serial News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express