scorecardresearch

ரஞ்சிதமே பாடலுக்கு செம டான்ஸ்… விக்ரம் பட நடிகையின் வைரல் வீடியோ

விஜய் மானசி குரலில் வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

ரஞ்சிதமே பாடலுக்கு செம டான்ஸ்… விக்ரம் பட நடிகையின் வைரல் வீடியோ

விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு நடிகை ஷிவானி நாராயணன் டாஸ் ஆடியுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தற்கு தமன் இசையமைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்ட அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியானது. விஜய் மானசி குரலில் வெளியான ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.

எப்போதும் விஜய் படத்தின் பாடல்கள் வெளியாகும்போது அந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடி வீடியோ பதிவிடுவது வழக்கம். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் பட்டையை கிளப்பிய நிலையில், தற்போது ரஞ்சிதமே பாடலும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரை சீரியல் பிரபலம் ரித்திகா இந்த பாடலுக்கு நடனமாடிய நிலையில், தற்போது நடிகை ஷிவானி நாராயணன் நடனமாடியுள்ளார்.

சின்னத்திரை சீரியலிகளில் இருந்து திரைப்பட நடிகையாக மாறிய ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ஷிவானி தற்போது டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சிகப்பு நிற உடையில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு அவர் குத்தாட்டம் ஆடியுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress shivani narayanan dance with varisu ranjithame song