சமூக சேவையில் சிறந்து விளங்கும் நடிகைகள்!

தமிழ் நடிகைகள் பலரும் என்.ஜி.ஓ.க்கள் அமைத்து, அல்லது அவர்களுடன் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்கள். அப்படி அவர்கள் செய்வது என்ன?

தமிழ் நடிகைகள் சமூக சேவையை சிறப்பாக செய்து வருகிறார்கள். அவர்கள் யார் யார் என்ன செய்கிறார்கள் என்பதை விளக்கும் புகைப்பட தொகுப்பு இது.

நடிகை அமலா பால் : அமலா ஹோம் என்ற பெயரில் கண் தான விழிப்புணர்வுக்காக சமூக சேவை அமைப்பை தொடங்கியுள்ளார். அவர் மட்டுமல்ல, இன்னும் சில நடிகைகளும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி : சரத்குமாரின் மகளான இவர், வேலை பார்க்கும் இடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை களைவதற்காக ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். சுமார் ஒரு லட்சம் பெண்களிடம் கையெழுத்து வாங்கி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முதல்வரிடம் அதை கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தா : சமீபத்தில் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்ட அவர், ப்ரதியுக்‌ஷா சப்போர்ட் என்ற பெயரில் என்.ஜி.ஓ ஆரம்பித்து, 2012ம் ஆண்டு முதல் குழந்தைகள், பெண்களுக்கு மருத்துவம், படிப்புத் தொடர்பான உதவிகளை செய்து வருகிறார்.

நடிகை ஷ்ரேயா சரண் : திருமண சர்சையில் சிக்கி வரும் இவர், 2011ம் ஆண்டு முதல் பார்வையற்றவர்களுக்கான ஸ்பா ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

நடிகை கவுதமி : கேன்சர் நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டு வந்தவர் என்பதால், கேன்சர் நோய் தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

நடிகை ரேவதி : தீவிர சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த காலக்கட்டத்தில், பேனியன், எபிலிட்டி பவுண்டேஷன், டங்கர் பவுண்டேஷன் என்ற அமைப்புகளுடன் சேர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.

×Close
×Close