Advertisment

ராதா ரவிக்கு பதிலடி தந்த ’ஐரா’ குழு!

உன்ன மாதிரி ஆளுங்கனால தான் குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணனும்ன்னு நினைக்கிற பொம்பளைங்கனால வெளில போய் நிம்மதியா வேலை செய்ய முடியல

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airaa releasing on mars 28 - ஐரா ரிலீஸ்

கடந்த 2017-ல் வெளியாகி சமூக வலைதளங்களிலும், சினிமா ரசிகர்களிடையேவும் அதிக விமர்சனத்துக்குள்ளான குறும்படம் ‘லக்‌ஷ்மி’.

Advertisment

இதனை இயக்குநர் சர்ஜூன் இயக்கியிருந்தார்.

சினிமாப் படங்கள் ஏற்படுத்தும், விவாதத்தை அந்தக் குறும்படம் ஏற்படுத்தியிருந்தது. அதன் பின் ‘மா’ என்ற அடுத்த குறும்படத்தை இயக்கிய சர்ஜூன், நடிகை வரலட்சுமி நடிப்பில் ’எச்சரிக்கை’ என்ற படத்தை இயக்கினார்.

இதனைத் தொடர்ந்து ‘ஐரா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் இவர். இதில் நயந்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு கதை திரைக்கதை எழுதியிருக்கிறார் பிரியங்கா ரவீந்திரன். நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு, கலையரசன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

நயன்தாரா நடிக்கும் 63-வது படமான இது த்ரில்லர் களத்தில் இயக்கப்பட்டுள்ளது. அதோடு ஐரா-வில் அவர் இருவேடங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராதா ரவி பேசிய சர்ச்சை வார்த்தைகளைத் தொடர்ந்து, அவருக்கு பதிலடி தரும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்கள் ஐரா படக்குழுவினர்.

படத்தின் ப்ரோமோவான அதில், ‘நீ மீடியாவுல தான இருக்க, நாலஞ்சு பேரோட இருக்காம, நீ இந்த நிலைமைக்கு வந்திருப்பியா என ஒருவர் கேட்க, உன்ன மாதிரி ஆளுங்கனால தான் குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணனும்ன்னு நினைக்கிற பொம்பளைங்கனால வெளில போய் நிம்மதியா வேலை செய்ய முடியல” என்கிறார் நயன்தாரா. இந்த ப்ரோமோ அவர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து ஐரா படம் வரும் 28-ம் தேதி திரைக்கு வருகிறது.

Tamil Cinema Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment