ரஜினிகாந்த் மகள் வீட்டில் நகை கொள்ளை: காவல் நிலையத்தில் புகார்

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரஜினி மகள்

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது ’லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐஸ்வர்யா இல்லத்தில் லாக்கரில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக  ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது வீட்டில் பணிபுரியு,ம் பணியாளர்கள் நகைகளை திருடி இருக்கலாம் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Aishwarya rajinikanth home theft gold jewels

Exit mobile version