Advertisment

தேசிய விருதுக்கு இணையாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது.. அஜித் வென்றது எப்படி?

(வெர்சடைல்) நடிகருக்கான தாதாசாகேப் விருதை தல அஜித் தட்டிச் சென்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
தேசிய விருதுக்கு இணையாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது.. அஜித் வென்றது எப்படி?

ajith award thala ajith phalke south awards : 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வெற்றியாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் சிறப்பான பங்காற்றிய கலைஞர்களுக்கு இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதாசாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில், டூலெட் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருது பட்டியலில் சிறந்த பல்துறை நடிகருக்கான விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பல்துறை (வெர்சடைல்) நடிகருக்கான தாதாசாகேப் விருதை தல அஜித் தட்டிச் சென்றுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அஜித்துக்கு இந்த விருதுக்கான அறிவிப்பு வெளியானது முதல் அவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். சினிமாவில் மிகச் சிறந்த பங்கலிப்புக்காக இந்த விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா குழு அறிவித்துள்ளதன்படி, தமிழ் மொழிக்கான விருது பட்டியலில் ‘அசுரன்’ படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘ராட்சசி’ படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு சிறந்த இயக்குனருக்கான தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். இந்த ஆண்டு அஜித்தின் வலிமை படத்திற்கு ரசிகர்கள் வெயிட்டிங். ஆண்டு துவக்கமே அஜித்திற்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment