1 ரூபாய்க்கு பழச்சாறு! - அசத்தும் அஜித் ரசிகர்

காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை Fresh Fruit Juice ரூபாய் ஒன்று மட்டுமே

தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் பிறந்தநாள் வந்தது என்றால், அதை அந்த ஹீரோ கொண்டாடுகிறாரோ இல்லையோ, ரசிகர்களை அதிர வைத்து விடுவார்கள். அதிலும், தல – தளபதி எனும் பெயர்களுக்கு வைப்ரேஷன் மிக அதிகம். இந்நிலையில், அஜித்குமாரின் பிறந்தநாள் வரும் மே 1ம் தேதி வருகிறது.

எதற்குமே வாய்த் திறக்காத அஜித், இந்த முறையும் தனது பிறந்தநாளுக்கு பெரிதாக எதையும் ரியாக்ட் செய்யப் போவதில்லை என்பது தெரிந்த விஷயம் தான். இருப்பினும், இரண்டு மாதங்களுக்கு முன்பே ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில், பழச்சாறு கடை வைத்திருக்கும் அஜித் ரசிகர் ஒருவர், மனம் குளிரும் அளவிற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தல அஜித் பிறந்த நாளை முன்னிட்டு (29-04-2018) காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை Fresh Fruit Juice ரூபாய் ஒன்று மட்டுமே. பயனாளிகள் கோடை தாகத்தை தணித்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close