Advertisment

'துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை': திடீரென டிரெண்ட் ஆகும் கருணாநிதி ட்வீட்

துணிவு குறித்து கலைஞர் கருணாநிதி பதிவிட்டதால் துணிவு படத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை': திடீரென டிரெண்ட் ஆகும் கருணாநிதி ட்வீட்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட்டை டிரெண்டாக்கி துணிவு படத்திற்கு அஜித் ரசிகர்கள் புரமோஷன் செய்து வருகிறார்கள்.

Advertisment

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. விஜயின் வாரிசு படத்துடன் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் மோதவுள்ள துணிவு படத்திற்கான புரமோஷன்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: வாரிசு- துணிவு முதல் காட்சி கட்டணம் இவ்ளோ ரூபாயா? ஷாக் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் கட் அவுட் வைப்பது, பாதயாத்திரை செல்வது என வித்தியாசமாக புரமோஷன் செய்து வருகின்றனர். பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கில் ஒரிஜினல் பணம் நோட்டு போல் டிக்கெட் அச்சிடப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படுகிறது. அதேநேரம், விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது. விஜய், அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என வெவ்வேறு நேரங்களில் முதல் காட்சிகள் திரையிட முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த ட்வீட்டில் ''துணிவு இருந்தால் துக்கம் இல்லை. துணிவு இல்லாதவனுக்கு, தூக்கம் இல்லை'' என்று கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டிருந்தார். துணிவு குறித்து கலைஞர் கருணாநிதி பதிவிட்டதால் துணிவு படத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Ajith Kalaignar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment