Advertisment

ஸ்விஸ் பேங்க்… காந்தி கணக்கு… துணிவு படத்தின் காசேதான் கடவுளடா பாடல் ரிலீஸ்!

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு; காசேதான் கடவுளடா பாடலுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

author-image
WebDesk
New Update
ஸ்விஸ் பேங்க்… காந்தி கணக்கு… துணிவு படத்தின் காசேதான் கடவுளடா பாடல் ரிலீஸ்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தென்னிந்திய திரைப்படங்களில் ஒன்று அஜீத்குமார் துணிவு. அஜீத்தை புத்தம் புதிய அவதாரத்தில் பார்க்கவும், படம் பற்றிய கூடுதல் அப்டேட்டுகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: ‘பத்மினிக்கு கூட சிவாஜி அப்படி முத்தம் கொடுத்திருக்க மாட்டார்’: இளையராஜா சுவாரஸ்யம்

துணிவு ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர் படம், இதில் அஜித் குமார் தீவிர புதிய அவதாரத்தில் நடித்துள்ளார். துணிவு படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். எச் வினோத் இயக்கியுள்ள படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜீத் இயக்குனர் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் இது.

இந்தப் படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் பாடல் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தநிலையில், இப்போது துணிவு படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

துள்ளல் இசையுடன் கூடிய இந்த காசேதான் கடவுளா பாடலை வைசாக், மஞ்சு வாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை வைசாக் எழுதியுள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடல் வெளியானதிலிருந்து இணையத்தில் அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது. வைசாக்கின் ஹிப் ஹாப் ஸ்டைல் பாடல் எல்லோரையும் ரிபீட் கேட்க வைப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மஞ்சு வாரியர் குரல் சூப்பராக உள்ளதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment