நடிகர் அஜித்குமார் விமான நிலையத்தில் இருந்த ரசிகர்களுடன் கை கொடுத்துவிட்டு புகைபடம் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. நேர்கொண்ட பார்வை இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீ மேக் ஆகும்.
அஜித் நேர்கொண்ட பார்வை படத்துக்கு அடுத்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
அஜித் குமார் சினிமாவைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் மரியாதையாகவும் நட்புடனும் பழகக் கூடியவர் என்ற நற்பெயர் கொண்டவர்.
நடிகர் அஜித் குமார் எங்கே சென்றாலும் அவர் ரசிகர்களுக்கு கைகொடுத்து நலம் விசாரித்து விட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு செல்வது வழக்கம்.
அந்த வகையில், அவர் சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையத்திற்கு சென்றபோது, அங்கே விமான நிலைய காவலர்களுடன் கைகொடுத்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"