Advertisment

தல அஜித்துக்கு ஜோடியாக நடித்தவரின் அடுத்த அவதாரம்

நடிகர் அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை கனிகா சினிமாவில் தனது புதிய அவதாரத்தை அறிவித்துள்ளார். முதல் முறையாக கேமராவுக்குப் பின்னால் இருந்து. நான் எப்போதும் சினிமா ஒரு கடல் போன்றது என்று நினைப்பேன் என்று கனிகா குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress kaniha, kaniha, ajith movie heroine kaniha,கனிகா, நடிகை கனிகா, kaniha become director, kaniha debut direction, இயக்குனர் ஆகும் கனிகா, kaniha debut directing short film, தமிழ் சினிமா செய்திகள், kaniha first short film, tamil cinema news

actress kaniha, kaniha, ajith movie heroine kaniha,கனிகா, நடிகை கனிகா, kaniha become director, kaniha debut direction, இயக்குனர் ஆகும் கனிகா, kaniha debut directing short film, தமிழ் சினிமா செய்திகள், kaniha first short film, tamil cinema news

நடிகர் அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை கனிகா சினிமாவில் தனது புதிய அவதாரத்தை அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமா உலகத்திற்கு ஃபைவ் ஸ்டார் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இந்த படத்தை தொடர்ந்து கனிகா, தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பல தெலுங்கு, மலையாள சினிமாக்களிலும் கதாநாயகியாக நடித்தார்.

கனிகா சினிமா துறையில் ஒரு நடிகையாக மட்டுமில்லாமல், ஜெனிலியா, ஷ்ரேயா போன்ற முன்னணி ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராகவும் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நடிகை கனிகா தல அஜித் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பலரின் கவனத்தைப் பெற்றார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கு ஓகே கண்மணி படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, கனிகா பல மலையாள சினிமாக்களில் சிறிய பாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், நடிகை கனிகா, விஜய் சேதுபதியின் யாதும் ஊரே... யாவரும் கேளிர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.

ஒரு நடிகையாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் தொடர்ந்து சினிமாவுக்குள் இருந்துவரும் நடிகை கனிகா இப்போது இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பில் இருப்பது பொன்று வெளியிட்டுள்ள புகைப்படத்தில், “முதல் முறையாக கேமராவுக்குப் பின்னால் இருந்து. நான் எப்போதும் சினிமா ஒரு கடல் போன்றது என்று நினைப்பேன்.

ஒரு கலைஞருக்கு ஆராய்ந்து ஜொளிக்க கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன. என்னுள் இருக்கும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் முதல் முறையாக இயக்க முயற்சிக்கிறேன். என் இதயத்திற்கு மிக நெருக்கமான ஒரு கருப்பொருளில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்திற்கு தயாராக இருங்கள். போஸ்ட் புரடக்‌ஷன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், கனிகா தமிழ் சினிமாவுக்கு தனது குறும்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்து மீண்டும் வருகிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Cinema Ajith Thala Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment