“நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாம்” - அஜித்

‘நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாம்’ என அஜித் சொன்னதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

‘நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாம்’ என அஜித் சொன்னதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது. இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் ஒரே ஹெலிகாப்டரில் விழா நடந்த மைதானத்துக்குள் வந்து இறங்கினர்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக, சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், லைகா மொபைல் உள்ளிட்ட சில நிறுவனங்களும் நிதியுதவி அளித்தன.

ஆனால், இந்த விழாவில் மூத்த கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி நடிகர் சங்க டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார் எஸ்.வி.சேகர். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், தனது இல்லத்தில் சற்றுமுன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.வி.சேகர், “நட்சத்திரக் கலைவிழாவில் கலந்துகொள்ள அஜித்துக்கு அழைப்பு விடுத்தோம். மக்கள் காசு கொடுத்து வாங்கும் தியேட்டர் டிக்கெட்டில் இருந்துதான் நாம் சம்பாதிக்கிறோம். எனவே, நடிகர் சங்க கட்டிடத்தை, நாமே காசு போட்டு கட்டிக் கொள்ளலாம் என அஜித் கூறினார்” என்று தெரிவித்துள்ளார். அவர் சொன்ன இந்த விஷயம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

×Close
×Close