Advertisment

வரேன்னு சொன்ன ரஜினி வரவில்லை... வர மாட்டேன்னு சொல்ற அஜீத்..? அதிரடி அறிக்கை... ஆரவார ரெஸ்பான்ஸ்

Actor Ajith Kumar: அஜீத் எடுத்த அந்த தைரியமான முடிவால், தமிழ் சினிமா உலகமே ஒரு புத்துணர்வைப் பெற்றிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ajithkumar Clears His Stand On Politics, Rajinikanth, Tamilisai Soundararajan, BJP, நடிகர் அஜீத்குமார், அரசியல், ரஜினிகாந்த்

Ajithkumar Clears His Stand On Politics, Rajinikanth, Tamilisai Soundararajan, BJP, நடிகர் அஜீத்குமார், அரசியல், ரஜினிகாந்த்

Actor Ajithkumar Statement about Politics: நடிகர் அஜீத்குமார் விடுத்த அறிக்கை, அவரது ரசிகர்களை எப்படி பாதித்ததோ தெரியாது. ஆனால் பொதுத்தளத்தில் அவர் மீதான மரியாதையை உயர்த்தியிருக்கிறது.

Advertisment

சினிமாவுக்கு வருகிறவர்களுக்கு வெற்றி பெறுவது முதல் இலக்கு என்றால், அடுத்த இலக்கு அந்த வெற்றியை தக்க வைப்பது! இதுல் முதல் இலக்கு பலருக்கும் வசப்படுவதுதான். இரண்டாவது அம்சம், சுலபமல்ல.

சினிமாவில் கிடைத்த வெற்றியை தக்கவைக்க நடிகர்களுக்கு உதவி செய்பவைதான் ரசிகர் மன்றங்கள்! இப்படி மன்றங்கள் தங்களுக்கு அமையாதா? என கோடிகளை கொட்டவும் தயாரான நடிகர்களை கோடம்பாக்கம் அறியும். ஆனால் ஊருக்கு ஊர் அமைந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு, ‘அவங்கவங்க வேலையைப் பாருங்க’ என அனுப்பி வைத்தவர் அஜீத்குமார் மட்டுமே!

Read More: என் பெயரோ, புகைப்படமோ அரசியல் நிகழ்வில் இடம் பெறக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் கண்டிப்பு

ஆனால் இதன் பிறகும் இவருக்கு ரசிகர், ரசிகைகளின் எண்ணிக்கை எகிறுவதுதான் வியப்பு! வலிந்து தன்னை எங்கேயும் முன்னிறுத்திக் கொள்ளாதவர் அஜீத். அதேசமயம், வலியுறுத்தல்களுக்கு பணிகிற டைப்பும் இல்லை. அதனால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில், நடிகர்கள் இது போன்ற விழாக்களுக்கு கட்டாயப்படுத்தி அழைக்கப்படுவதாக போட்டு உடைத்தார்.

Ajithkumar Clears His Stand On Politics, Rajinikanth, Tamilisai Soundararajan, BJP, நடிகர் அஜீத்குமார், அரசியல், ரஜினிகாந்த் Ajithkumar vs Rajinikanth: வரமாட்டேன்னு சொல்ற அஜீத்தை காலம் இப்படியே இதே ரூட்டில் விடுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவர் மீது வைத்திருந்த பாசமும், ஜெயலலிதா மீது இவர் வைத்த மரியாதையும் தெரிந்ததுதான். ஆனாலும் அதை பயன்படுத்தி அரசியலுக்குள் ‘தல’ நுழைக்க இவர் முயற்சிக்க வில்லை.

ரஜினிகாந்துக்கும், இவருக்கும் சினிமாவில் நிழல் யுத்தம் கூட கிடையாது. ரஜினியுடன் மோதி தன்னை பெரிய ஆளாகக் காட்டவும் அஜீத் ஒருபோதும் முனைந்ததில்லை.

விஸ்வாசம் படத்தை பொங்கல் ரிலீஸாக அறிவித்து இவர்கள் பணி தொடங்கி விட்ட பிறகு, பேட்ட படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. உடனே விஸ்வாசம் பின் வாங்கும் என பலர் எதிர்பார்த்தனர். தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் பலருமே, ‘சன் பிக்சர்ஸ்-ரஜினிகாந்த் கூட்டணியுடன் மோதினால், விஸ்வாசம் ஜெயிக்க முடியாது. பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்’ என பயமுறுத்தினார்கள்.

ஆனால் அஜீத், ‘நாமாக வலுக்கட்டாயமாக போட்டிக்கு போகவில்லை. முதலில் அறிவித்த நமது பட ரிலீஸ் தேதியை மாற்றத் தேவையில்லை’ என்பதில் உறுதி காட்டினார். அஜீத் கதை இதோடு முடிந்தது என்றுதான் தமிழ் சினிமாவின் இதர இரண்டாம்கட்ட நடிகர்கள் பலருமே நினைத்தனர்.

Ajithkumar Clears His Stand On Politics, Rajinikanth, Tamilisai Soundararajan, BJP, நடிகர் அஜீத்குமார், அரசியல், ரஜினிகாந்த் Ajithkumar vs Rajinikanth: அஜீத்தின் இமேஜ் கூடிக்கொண்டு போவதை தல ரசிகர்கள் ரொம்பவே மெச்சுகிறார்கள்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் சமீப ஆண்டுகளில் எப்போதும் இல்லாத வகையில் தியேட்டர்களுக்கு கூட்டத்தை அள்ளி வந்திருக்கின்றன. அஜீத் எடுத்த அந்த தைரியமான முடிவால், தமிழ் சினிமா உலகமே ஒரு புத்துணர்வைப் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள அத்தனை வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யமான விஷயம், 40 ஆண்டுகளாக ரசிகர் மன்ற பலத்துடன் இருப்பவர் ரஜினிகாந்த். அவருக்கு இணையாக அதிகாரபூர்வ மன்றம் எதுவுமே இல்லாத அஜீத்துக்கும் கொடி, தோரணம், பிளக்ஸ் என தியேட்டர்கள் அமர்களப்பட்டதுதான். இன்னும் சொல்லப்போனால், இளம் வயது ரசிகர்களும், குடும்ப ஆடியன்ஸும் விஸ்வாசத்தை பெரிய அளவில் ஹிட் ஆக்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில்தான் அஜீத்தை மெள்ள அரசியல் வளைக்க ஆரம்பித்தது. திருப்பூரில் அஜீத் ரசிகர்கள் என சொல்லிக்கொண்ட சிலர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பாஜக.வில் இணைந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, ‘அஜீத் நேர்மையானவர்’ என புகழ்ந்தார். தவிர, மோடியின் திட்டங்களை அஜீத் ரசிகர்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவ்வளவு நாட்களாக ரஜினிகாந்தை எதிர்பார்த்து பாஜக காத்திருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் ரஜினிகாந்த் இப்போது தேர்தல் களத்திற்கு வருவதாக இல்லை. இந்தச் சூழலில் ரஜினி ரசிகர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் களமாடிக் கொண்டிருக்கும் அஜீத் ரசிகர்களை பாஜக உசுப்பி விடுவது பலமான அரசியல்தான்!

எனவேதான் ஜனவரி 21-ம் தேதி பட்டென ஒரு அறிக்கை விட்டார் அஜீத். ‘நான் தொழில் முறை நடிகனாக வந்தவன். வரிசையில் நின்று வாக்களிப்பதுதான் என் உச்சபட்ச அரசியல். நான் யாருடன் மோதுவதற்கும் சினிமாவுக்கு வரவில்லை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலுக்கும் வருவதாக இல்லை’ என ரஜினியுடன் நடக்கும் சினிமா போட்டி, அரசியல் என அத்தனைக்கும் ஒரே அறிக்கையில் பதில் சொன்னார் அஜீத்.

ரசிகர்கள் இப்படி ஆர்ப்பரித்து நிற்கிற வேளையிலும், ‘நான் அரசியலுக்கு வரமாட்டேன்’ என வெட்டு ஒன்று, துண்டு ரெண்டாக அறிவிக்கிற பக்குவம் சாதாரணமாக யாருக்கும் வாய்ப்பதில்லை. இதுவே அஜீத் மீதான மரியாதையை பொதுத்தளத்தில் அதிகப்படுத்துகிறது.

பாஜக மாநில தலைவர் தமிழிசையும், அஜீத்தின் இந்த வெளிப்படையான அறிவிப்பை பாராட்டியிருக்கிறார். ‘வர்றேன்னு சொல்லி இழுக்காம, வரமாட்டேன்னு உறுதியா சொன்ன நிலைப்பாடு பாராட்டத்தக்கது’ என அதிலும் யாருக்கோ குட்டு வைப்பது போல இருந்தது தமிழிசை பேட்டி.

ஏதோவொரு வகையில் அஜீத்தின் இமேஜ் கூடிக்கொண்டு போவதை தல ரசிகர்கள் ரொம்பவே மெச்சுகிறார்கள். அரசியல் அதிகாரத்தில் எப்போதுமே, ‘கூட்டணி வைக்கமாட்டோம்னு சொன்னா, வைப்போம்னு அர்த்தம்’ என்பார்கள். அதேபோல வருவேன்னு சொன்ன ரஜினி, ஓராண்டு கடந்த பிறகும் மவுனம் காக்கிறார். வரமாட்டேன்னு சொல்ற அஜீத்தை காலம் இப்படியே இதே ரூட்டில் விடுமா?

 

Rajinikanth Ajith Tamilisai Soundararajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment