Advertisment

"விசுவாசம்" - அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

'விவேகம்' படம் தோல்வி அடைந்ததால், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனுக்கு அடுத்த படத்தில் நடித்துக் கொடுப்பதற்காகவே அஜித்தின் 'விசுவாசம்' வெளியாக இருக்கிறது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
"விசுவாசம்" - அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்து சத்யஜோதி பிலிம்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

பாரம்பரிய பட நிறுவனமான சத்ய ஜோதி films சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார். அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு "விசுவாசம்" என்று தலைப்பிடபட்டு இருக்கிறது. ஜனவரி மாதம் "விசுவாசம்" படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2018 தீபாவளி அன்று "விசுவாசம்" வெளிவரும் என தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்தார்.

முன்னதாக, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் கடைசியாக நடித்து வெளிவந்த 'விவேகம்' படம் தோல்வி அடைந்ததால், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனுக்கு அடுத்த படத்தில் நடித்துக் கொடுப்பதற்காகவே அஜித்தின் 'விசுவாசம்' வெளியாக இருக்கிறது.

படத்தின் இதர டெக்னீஷியன்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment