அய்லா மாதிரி ஒரு லைலா வேணும்… ஆல்யா மானசா- சஞ்சீவ் நிஜ ரொமான்ஸ் வீடியோ

நடிகை ஆல்யாவிடம் அவருடைய கணவர் சஞ்சீவ் கார்த்திக் தனது மகள் அய்லா மாதிரி ஒரு லைலா வேணும் என்று ஜாலியாக ரொமான்ஸாக பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

Alya Manasa, Raja Rani, Raja Rani herohine Alya Manasa, Alya Manasa Sanjeev Karthick romance video, அய்லா மாதிரி ஒரு லைலா வேணும், ஆல்யா மானசா- சஞ்சீவ் கார்த்திக், ஆல்யா மானசா- சஞ்சீவ் கார்த்திக் ரொமான்ஸ் வீடியோ, ராஜா ராணி, Alya Manasa romance video Raja Ranai Serial

பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசாவும் அவருடைய கணவர் சஞ்சீவ்-ம் ஜாலியாக ரொமான்ஸ் செய்த ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

ராஜா ராணி சீரியல் முடிந்தாலும் இந்த ஜோடி மீண்டும் இன்னொரு சீரியலில் ஹொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு, ஆல்யா மானசா – சஞ்சீ ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அய்லா என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வருகிறார்கள்.

ஆல்யா மானசா திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து டிவி சீரியலில் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக நடிகர் சித்து நடிக்கிறார். தொடக்கத்தில் சுமாராக போய்க்கொண்டிருந்த இந்த சீரியல் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீசனில் மீண்டும் முத்திரை பதித்து வருகிறார்.

அதே போல, ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் கார்த்திக் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்தார்.

ஆல்யா மானசா சீரியலில் பிசியாக இருந்தாலும் சமூக ஊடகங்களிலும் பிசியாக இருக்கிறார். புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுன் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்.

தற்போது ஆல்யா மானசா – சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ஒரு மதிய வேளையில் ஒரு லன்ச் டைமில் ஜாலியான ரொமான்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களின் மகிழ்ச்சியை பெற்றுள்ளனர். அதில், சஞ்சீவ், ஆல்யா மானசாவிடம் இப்படி சாப்பிட்டா எப்படி அய்லா மாதிரி ஒரு லைலா வேணும் என்று கூறி ஜாலியாக பேசியுள்ளார்.

ஆல்யா மானசா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஆல்யா மானசா சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது ஆல்யா, அங்கே சாப்பாட்டு கேரியரைக் காட்டி இவ்வளவு பத்தியா சாப்பாடு கொடுத்து அனுப்பினால், ஒரு ஹீரோயின் எப்படி ஒல்லியாவறது. ஹீரோயின் ஒல்லியா எப்படி மெயிண்டயின் பண்றது என்று கேட்கிறார். அதற்கு அவருடைய கணவர் சஞ்சீவ், அதற்கு ஹீரோயின் ஃபில் பண்ணணும் நீங்க ஏன் ஃபீல் பண்றீங்க என்று கேட்கிறார். இதைக் கேட்டு ஆல்யா மானசா, அப்பனா நான் ஹீரோயின் இல்லணு சொல்றீங்க இல்லையா என்று கேட்கிறார். அதற்கு சஞ்சீவ் நான் சொல்லல பாபு என்று சமாளிக்கிறார். பிறகு, சஞ்சீவ் நான் என்ன சொன்னே, நல்லா அள்ளி சாப்பிடுங்க, அப்பதானே அய்லா மாதிரி ஒரு லைலா வரும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஆல்யா, புரியாமல் முழிக்கிறார். அருகே இருந்த பெண் ஒருவர் இதைக் கேட்டு சிரிக்கிறார். இதற்கு கார்த்தி என்ன சிரிக்கிறாங்க என்று கேட்கிறார். அந்த பெண், அய்லா மாதிரி ஒரு லைலா என்று கூறி மீண்டும் சிரிக்கிறார்.

அதற்கு சஞ்சீவ் கார்த்திக், ஆமா வேண்டாமா லைலா, ஐ மீன் யூ கருவாடு என்று கூறுகிறார். இதைக் கேட்டு ஆல்யா மானச அய்லா மாதிரி லைலானா என்ன என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் மீண்டும் சிரிக்கிறார். சஞ்சீவ் கார்த்திக் உலகத்துக்கே புரியுது உனக்கு புரியலையா என்று கேட்க ஆல்யா ஜாலியாக மயக்கப் போட்டு விழுவது போல பாவனை செய்து மயங்கிட்டேன் என்று சொல்கிறார்.

அதற்கு சஞ்சீவ் கார்த்திக் மயங்கி மயங்கி விழுந்துடுச்சு என்று சொல்கிறார். அதற்குள் ஒரு பெண் படப்பிடிப்பு ரெடியாகி விட்டது என்று சொல்கிறார். ஆல்யாவும் வருவதாக சொல்கிறார்.

நடிகை ஆல்யாவிடம் அவருடைய கணவர் சஞ்சீவ் கார்த்திக் தனது மகள் அய்லா மாதிரி ஒரு லைலா வேணும் என்று ஜாலியாக ரொமான்ஸாக பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Alya manasa and his husband sanjeev karthick jolly romance video goes viral

Next Story
காட்டாறு… அவனுக்கு கரையும் கிடையாது… தடையும் கிடையாது… அதிரடி ஆக்ஷனுடன் அண்ணாத்த டீசர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X