Advertisment

குவாரண்டைனில் பார்ட்டி: வைரலாகும் அமலா பால் வீடியோ

தனது சகோதரரின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலேயே குவாரண்டைன் பார்ட்டியை அரேஞ் செய்திருக்கிறார் அமலா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amala paul party video

amala paul party video

Amala Paul : நடிகை அமலா பால் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘மைனா’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தார்.

Advertisment

டாக்டர்கள், போலீசை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று – சென்னையில் பரபரப்பு

விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த அமலா, இயக்குநர் ஏ.ஏல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருப்பினும் இந்த திருமணம் வெகுநாட்கள் நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் விரைவிலேயே விவாகரத்தாகி பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் அமலா பால்.  குறிப்பாக பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தினார். அந்த வகையில் அமலா நடித்த ‘ஆடை’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் : பாதிப்பு அதிகமுள்ள சென்னையின் 7 மண்டலங்கள்

இந்நிலையில் தனது சகோதரரின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலேயே குவாரண்டைன் பார்ட்டியை அரேஞ் செய்திருக்கிறார் அமலா. மாஸ்க் அணிந்துக் கொண்டு டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment