பாடகருடன் அமலா பாலின் புதிய நட்பு : வைரலாகும் படங்கள்

கசிந்த அந்த படங்களில், அமலா முஸ்லீம் போல புர்கா அணிந்திருக்கிறார். பவ்னிந்தரின் மதத்தை அவர் மதிப்பது இதன் மூலம் தெரிகிறது.

By: Updated: March 12, 2020, 03:43:06 PM

Amala Paul : பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘மைனா’ திரைப்படத்தில் டைட்டில் வேடத்தில் நடித்து, ரசிகர்களுக்கு பரிச்சயமானார் நடிகை அமலா பால். அதைத் தொடர்ந்து விஜய், விக்ரம், ஆர்யா மற்றும் தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். தான் நடித்த ‘தலைவா’ மற்றும் ‘தெய்வ திருமகள்’ ஆகிய படங்களின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து, 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2017-ல் இந்தத் தம்பதிக்கு விவாகரத்தானது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்க்காணலில் தான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், ஸ்கிரிப்ட் செலக்‌ஷனில் அவரது ஆலோசனையைப் பெறுவதாகவும் அமலா பால் கூறியிருந்தார்.

ஹாய் கைய்ஸ் : உலகததரத்தில் நவீனமயம் ஆகும் இந்திய ரயில் நிலையங்கள்

மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் அமலா லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  அமலாவுடன் இருக்கும் சில படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டிருந்தார் பவ்னிந்தர்.  இருப்பினும் பிறகு அவை அகற்றப்பட்டுவிட்டன. கசிந்த அந்த படங்களில், அமலா முஸ்லீம் போல புர்கா அணிந்திருக்கிறார். பவ்னிந்தரின் மதத்தை அவர் மதிப்பது இதன் மூலம் தெரிகிறது. மேலும் ஈஸ்டர் விடுமுறையைக் கழிக்கும் ஒரு படத்தையும் வெளியிட்டிருந்தார் பவ்னிந்தர்.

பெண் மாவோயிஸ்ட் ‘கைது’ : நீதிமன்றத்தில் ஆஜர்?

ஈஸ்டர் விடுமுறை படத்தில், ஒரு பெண்ணை இறுக்கமாக அணைத்துக் கொண்டுள்ளார் பவ்னிந்தர். இது அமலா என்று ஊடகங்கள் கூறுகின்றன, ஆனாலும் ஊர்ஜிதமாகவில்லை. இந்த அறிக்கைகள் வெறும் வதந்திகளா அல்லது உண்மையா என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தால் தான் உண்டு. தற்போது பெண்ணை மையமாக வைத்து உருவாகும் ‘அதோ அந்த பறவை போல’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் அமலா. விரைவில் பிரபல திரைப்பட இயக்குநர் மகேஷ் பட் இயக்கும் பர்வீன் பாபி வாழ்க்கை வரலாற்றின் படப்பிடிப்பையும் தொடங்கவுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Amala paul living together relationship with bhavninder singh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X