’ஏ.எல்.விஜய் இனிமையானவர்’ – அமலா பால்!

Amala Paul's Reaction for AL Vijay Marriage: தலைவா படத்தில் நடிக்கும் போது ஏ.எல்.விஜய்யுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து, இருவரும் 2014-ல் திருமணம் செய்துக் கொண்டனர்.

By: Updated: July 15, 2019, 05:41:31 PM

பெண்களை முன்னணியாக வைத்து இயக்கப்படும் படம் என்றதுமே இயக்குநர்களின் நினைவுக்கு வரும் குறிப்பிட்ட தென்னிந்திய நடிகைகளில் அமலா பாலும் ஒருவர். அவர் நடித்திருக்கும் ‘ஆடை’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை ‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்தின குமார் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தான் கலந்துக் கொண்ட ஒரு நேர்க்காணலில் தனது பெர்சனல் மற்றும் புரபஷனல் லைஃப் குறித்து பகிர்ந்துக் கொண்டார் அமலா பால். அப்போது அமலாவின் முன்னாள் கணவர் ஏ.எல்.விஜய்யின் இரண்டாவது திருமணம் குறித்து, அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு புன்னகையுடன் பதிலளித்த அவர், “விஜய் இனிமையானவர். சிறப்பான மனிதர். அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான திருமண வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் இருவரும் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன்” என்றார்.

தலைவா படத்தில் நடிக்கும் போது ஏ.எல்.விஜய்யுடன் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து, இருவரும் 2014-ல் திருமணம் செய்துக் கொண்டனர். பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிவதாக அறிவித்தனர். 2017-ல் இவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Amala paul wishes al vijay second marriage

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X