அமிதாப் பச்சனுக்கு வந்த திடீர் சோதனை... கடந்து வருவாரா?

ஒரே விளம்பரம்... நான்கு மொழிகளில்... அமிதாப் பச்சனை மட்டும் தேடி வந்த சிக்கல்

பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் வங்கி ஊழியர்களை அவமதித்ததாகவும், அமிதாப் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் BMSன் வங்கி ஊழியர்களின் சங்கம் வலியுறுத்தல்.

amitabh bachchan controversy

கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அவர் மகள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவரது மகள் சுவேதாவுடன் இணைந்து பிரபல நிறுவனமான கல்யான் ஜுவல்லர்ஸ் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

அமிதாப் பச்சன் நடித்த விளம்பரத்தில் விவரம்:

இந்த விளம்பரத்தில் அமிதாப் பச்சன் தனது மகளுடன் வங்கிக்கு செல்கிறார். அங்கு பென்ஷன் தொடர்பாக பேச முற்படுகிறார். உடனே வங்கி ஊழியர்கள் அவரை உதாசினப்படுத்துகின்றனர். அடுத்தடுத்த கவுண்டர்களுக்கு அனுப்பப்படும் அமிதாப், இறுதியாக மகளுடன் வங்கி மேலாளரை சந்திக்கிறார்.தனக்கு ஒரு மாதத்தில் இரண்டு முறை பென்ஷன் ‘கிரடிட்’ ஆகிவிட்டது என்று கூறுகிறார். அதை கேட்டதும் மேலாளர் இதற்கு ‘நீங்கள் இவ்வளவு தூரம் வந்தீர்கள்? கொண்டாட வேண்டியது தானே, யாருக்கு தெரியப் போகிறது?’ என்கிறார். உடனே அதற்கு ‘எனக்கு தெரியும். யாருக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் தப்பு தப்புதான்’ என்று அமிதாப் கூறுகிறார். அதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த மேலாளர், உடனே கையெழுத்து இடுகிறார். இந்த விளம்பரம் 4 மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

அபிதாப் பச்சன் நடித்த ஹிந்தி விளம்பரம்:

மலையாளம் மொழியிலும் அமிதாப் பச்சன் தான் நடித்துள்ளார்:

இதே விளம்பரம் தெலுங்கு மொழியில் நாகர்ஜுனா நடித்துள்ளார்:

தமிழ் மொழியில் வழக்கம் போல நடிகர் பிரபு நடித்திருக்கிறார்:

இவ்வாறு 4 மொழிகளில் இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், ஹிந்தி மற்றும் மலையாளத்தில் இது பிரபலமாகியுள்ளது. எனவே இந்த விளம்பரம் வங்கி ஊழியர்கள்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுபோல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அந்த விளம்பரத்தை நீக்கவேண்டும் என்றும் அமிதாப் பச்சன் மன்னிப்பு கோரவேண்டும் என்று BMSன் வங்கி ஊழியர்களின் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டிருந்த ‘கல்யான் ஜுவல்லர்ஸ்’ நிறுவனம் தங்களின் வருதத்தை தெரிவித்துள்ளது. அதில், “இந்த விளம்பரம் முழுக்க முழுக்க கற்பணை மட்டுமே. யார் மனதை காயப்படுத்த எடுக்கப்பட்டதல்ல. ஒரு வேளை இதனால் யார் மனதாவது இந்த விளம்பரத்தால் காயப்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close