வெஜிடேரியன் தான் ஆரோக்கியம்... பீட்டாவின் பிரச்சார விளம்பரத்தில் எமி ஜாக்‌ஷன்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பீட்டா அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், தற்போது நடிகை எமி ஜாக்‌ஷன் பீட்டா பிரச்சார விளம்பரத்தில் நடித்துள்ளார்.

நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டமானது, தமிழத்தில் ஜல்லிக்கட்டை மீண்டும் மீட்டுவந்தது. குறிப்பபாக ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்த பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. மேலும், பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக இருந்த சினிமா பிரபலங்களுக்கு எதிராகவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கடுமையான விமர்சனத்திற்குள்ளானார்.

இந்நிலையில், பீட்டா நிறுவனத்திற்கு ஆதரவான பிரச்சார விளம்பரங்களில் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து நடித்து தான் வருகின்றனர். அந்த வகையில் நடிகை எமி ஜாக்‌ஷன் பீட்டாவின் பிரச்சார விளம்பரங்களில் நடித்துள்ளார்.

பீட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எமி ஜாக்‌ஷன் சைவ உணவு வகைகளுக்கு மாறியதனால், பல்வேறு வளர்சித மாற்றங்களில் மாற்றம் கண்டிருக்கிறார். மேலும், சைவ உணவுகள் ஆரோக்கியமானதோடு மட்டுமல்லாமல் ஆற்றல் வாய்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.0 படத்தில் எமி ஜாக்‌ஷன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close