இனியும் இந்த வேலையில் என்னால் நீடிக்க முடியாது : அர்ச்சனா திடீர் ராஜினாமா

VJ Archana resigns : பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியான அர்ச்சனா தனது பணியை ராஜினாமா செய்தார்

Anchor Archana : பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியான அர்ச்சனா தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.

Anchor Archana resigns : தனது பணியை ராஜினாமா செய்த அர்ச்சனா

அர்ச்சனா தற்போது தொலைக்காட்சியில் அதிகம் பிசியாகிவிட்டார். இவர், பிரபல தொலைக்காட்சியில் ‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டுமின்றி பிரபல FM சேனலில் பிக் மேட்னி என்கிற ஷோவையும் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் தனது ஆர்.ஜே பணியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

Anchor Archana

Anchor Archana

ஆர்.ஜே பணியை ராஜினாமா செய்தது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் நடத்தும் டிவி நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. புதிது புதிதாக செய்ய வேண்டியது இருக்கிறது. குடும்பத்திற்கும் நேரம்வேண்டும். அதனால் தான் ஆர்.ஜே பணியில் நீடிக்க விரும்பவில்லை.. விலகிவிட்டேன்” என்று விளக்கியிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close