அமலா பாலுக்கு பின்னணி பாடிய ஆன்ட்ரியா

‘இப்போது ஏன் இந்தக் காதல் என் மீது பாய்கிறதோ?’ என்று தொடங்கும் இந்தப் பாடலை, மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

‘இப்போது ஏன் இந்தக் காதல் என் மீது பாய்கிறதோ?’ என்று தொடங்கும் இந்தப் பாடலை, மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
amala paul party video

amala paul party video

அமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்காக பாடலொன்றைப் பாடியுள்ளார் ஆன்ட்ரியா.

Advertisment

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் ரீமேக் இது. மம்மூட்டி நடித்த வேடத்தில் அரவிந்த் சாமியும், நயன்தாரா வேடத்தில் அமலா பாலும் நடித்துள்ளனர். மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழிலும் இயக்கியுள்ளார்.

மலையாளப் படத்துக்காக எங்கெங்கு ஷூட்டிங் நடந்ததோ, அந்தந்த இடங்களிலேயே இந்தப் படத்தையும் ஷூட் செய்துள்ளனர். இரண்டு குழந்தைகளின் பெற்றோராக அரவிந்த் சாமியும், அமலா பாலும் நடித்துள்ளனர். ‘தெறி’ படத்தில் நடித்த மீனாவின் குழந்தை நைனிகாவும், ‘சேதுபதி’ படத்தில் விஜய் சேதுபதியின் மகனாக நடித்த மாஸ்டர் ராகவனும் குழந்தைகளாக நடித்துள்ளனர்.

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள டூயட் பாடலை, கார்த்திக் மற்றும் ஆன்ட்ரியா இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ‘இப்போது ஏன் இந்தக் காதல் என் மீது பாய்கிறதோ?’ என்று தொடங்கும் இந்தப் பாடலை, மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

Advertisment
Advertisements

“காதலர்களின் ரிங் டோனாக இந்தப் பாடல் நிச்சயம் இருக்கும்” என்கிறார் இசையமைப்பாளர் அம்ரீஷ். அந்த அளவுக்கு காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளை மதன் கார்க்கி எழுத, காதல் வழிய வழியப் பாடியிருக்கிறார்களாம் கார்த்திக்கும், ஆன்ட்ரியாவும்.

 

Lyricist Madhan Karky Amala Paul Arvind Swami Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: