‘ஜூலி’யை காதலர் தின பரிசாகத் தரும் அனிருத்

காதலர் தினத்தை முன்னிட்டு ‘ஜூலி’ என்ற காதலர் தின ஸ்பெஷல் பாடலை அனிருத்தும், விக்னேஷ் சிவனும் இணைந்து வெளியிட உள்ளனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு ‘ஜூலி’ என்ற காதலர் தின ஸ்பெஷல் பாடலை அனிருத்தும், விக்னேஷ் சிவனும் இணைந்து வெளியிட உள்ளனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு ஏகப்பட்ட காதல் பாடல்கள் வெளிவருவது வழக்கம். அவை படத்தில் இருந்தோ அல்லது இண்டிபெண்டண்ட் பாடல்களாகவோ இருக்கும். விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜுங்கா’ படத்தில் இருந்து ‘கூட்டிப்போ கூடவே’ என்ற பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை ரிலீஸாக இருக்கிறது.

என்னதான் படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருந்தாலும், காதலர் தினத்துக்கு என ஸ்பெஷல் பாடலை வெளியிட அனிருத் மறந்ததே இல்லை. ‘எனக்கென யாரும் இல்லையே’, ‘அவளுக்கென்ன’, ‘ஒண்ணுமே ஆகல’ ஆகிய பாடல்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்.

அதேபோல் இந்த வருடமும் ஒரு ஸ்பெஷல் காதல் பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். அந்தப் பாடலின் பெயர் ஜூலி. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு, இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகள் எழுதியுள்ளார். சோனி மியூஸிக் நிறுவனம் இந்தப் பாடலை வாங்கியுள்ளது. இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அனிருத்.

×Close
×Close