விராட் கோலிக்கு மாமனார் பரிசளித்த விலைமதிப்பற்ற கிஃப்ட் இதுதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கவிதை புத்தகமொன்றை வாங்கி பரிசளித்டு அசத்தியிருக்கிறார், அவரது மாமனார் அஜய் குமார் சர்மா.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கவிதை புத்தகமொன்றை வாங்கி பரிசளித்டு அசத்தியிருக்கிறார், அவரது மாமனார் அஜய் குமார் சர்மா.

விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் திருமணமாகி 2 மாதங்கள் நிறைவுற்றன. ஆனால், இன்னும் இந்த காதல் ஜோடி குறித்த பேச்சுதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அனுஷ்கா சர்மாவின் தந்தை அஜய் குமார் சர்மா, தன் மருமகன் விராட் கோலிக்கு கவிதை புத்தகமொன்றை பரிசளித்திருக்கிறார்.

விராட் கோலிக்கு கவிதைகள் என்றால் பிரியம். அதனால், தன் மருமகனுக்கு தேஜஸ்வினி திவ்யா நாயக் என்பவர் எழுதிய ஸ்மோக்ஸ் அண்ட் விஸ்கி என்ற புத்தகத்தை பரிசளித்திருக்கிறார். இதில், காதல் மற்றும் உறவு குறித்த 42 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு, அனுஷ்காவின் தந்தை அஜய் குமார் சர்மா மற்றும் தாய் ஆஷிமா ஆகியோர் சென்று, எழுத்தாளரின் கையெழுத்துடன் அப்புத்தகத்தை வாங்கியுள்ளனர்.

விராட் கோலி தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கும் கவிதைகள் என்றால் கொள்ளை பிரியம். தங்கள் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு சூஃபி கவிஞர் ரூமியின் கவிதை புத்தகத்தை தம்பதியர் பரிசளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close